கதாபாத்திரத்தை எந்தளவு உள்வாங்கி நடிக்கமுடியுமோ அந்தளவு நடித்திருக்கிறேன்! - பூமி பட்னாகர்
பூமி பட்னாகர் |
பூமி பட்னாகர்
ஒவ்வொரு நடிகையும் முழுப்படத்தையும் தன் தோளில் தாங்க ஆசைப்படுவார்கள். உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எப்படி உணர்கிறீர்கள். அதுவும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிற படமாக உள்ளதே?
சில மாதங்களுக்கு முன்னர் எதற்கென்றே தெரியாமல் மனச்சோர்வு அடைந்திருந்தேன். ஆனால் இனிமேல் அப்படி சூழல் இருக்காது. துர்காமதி படத்தை 190 நாடுகளில் சப்டைட்டிலோடு பார்க்க முடியும். இப்போதுள்ள நிலையில் படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியும். இது சரியான முடிவுதான் என்று நினைக்கிறேன்.
இதன் மூலப்படத்தில் நடித்த அனுஷ்காவோடு் உங்களை ஒப்பிடுவார்கள். இது உங்களுக்கு பதற்றமாக உள்ளதா?
அப்படியெல்லாம் இல்லை. நான் பாத்திரத்தை எந்தளவு முடியுமோ அந்தளவு உள்வாங்கி நடித்திருக்கிறேன். இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு முயன்று இருக்கிறேன். கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுத்துள்ளேன் என்று கூறுவேன்.
பெரும்பாலான திகில் படங்களில் பாதிக்கப்பட்டவராக பெண்களே இருக்கிறார்கள் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
அனைத்து கதைகளிலும் பெண்கள் முன்னிலையாகத்தான் இருக்கின்றனர். திகில் படங்களை நடிக்க அதிக துணிச்சல் தேவை. நான் ஆண்களை விட தைரியமான பெண்ணாகவே இருக்கிறேன்.
கடந்த ஆண்டில் இரண்டு வெற்றிப்படங்கள், ஒரு தோல்விப்படங்களை கொடுத்துள்ளீர்கள். இவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?
என்னால் நடிக்க முடியும் என்று நம்புகிறபடி கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வந்தால் அவற்றை ஏற்று நடிப்பேன். இதில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பானதுதான். வெற்றி, தோல்விகளால் பாதிக்கப்படாமல் இருப்பது கடினமானதுதான்.
சுகானி சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக