நான் செய்த விஷயம் காலத்திற்கும் நிலைத்து நிற்கவே நூல் எழுதினேன்! - சோனு சூட் , இந்தி நடிகர்
சோனு சூட்
திரைப்படங்களில் நடித்து வில்லனாக பெற்ற புகழை விட மனிதநேய உதவிகளால் உலக நாடுகள் வரை பாராட்டப்படும் ஆளுமை. மும்பையில் இவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரிடமே உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமைச்சர்களே சொல்லத்தொடங்கினர், ஆனால் மாநில அரசு அவரை பாஜகவின் ஆளாக பார்த்து விமர்சித்தது. பின்னர் சோனுசூட் முதல்வரை சந்தித்த பிறகு நிலைமை மாறியது. அதெல்லாம் விடுங்கள். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோனு சூட்டிற்கு மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஐயம் நோ மேசியா என தன்னுடைய சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவரிடம் பேசினோம்.
இப்படி புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது?
பேராசிரியராக பணியாற்றி என் அம்மாதான் இதனைச் சொன்னார். உன்னுடைய வாழ்க்கையை நீ காகித்ததில் எழுதி வைக்கவேண்டும். அதுதான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றார். இந்த நூலின் மூலம் கர் பேஜோ திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டவது என பலரும் அறிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். இதன்மூலம் பலரது வாழ்க்கையும் மாற்றம் கண்டிருக்கிறது.
சுசாந்த் சிங் தற்கொலை நெப்போடிசம் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியது. உங்களுடை திரையுலக வா்ழ்க்கை கூட பெரும் போராட்டங்களைக் கொண்டதுதான் அல்லவா?
திரையுலகத்தில் அதுவும் ஒரு பகுதி என சொல்லலாம். இங்குள்ள அனைவருமே முனையில்தான் உள்ளார்கள். இங்கு ஒருவருக்கு திறமை இருந்தால் மட்டுமே நீடித்து நிற்க முடியும்.
இலாஜ் இந்தியா, பிராவாஸி ரோஸ்கர் யோஜனா என தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருவதாக எழுதியிருந்தீர்கள். திரைப்படங்கள் தொடங்கினால் என்ன செய்வீர்கள்?
திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் நான் எனது அறக்கட்டளை பணிகளைச் செய்துகொண்டிருப்பேன். இப்பணிகளை எனது குழு ஆராய்ந்து உதவிகளை வழங்கும்.
நீங்கள் இப்படி உதவிகளை வழங்குவதை அரசியலுக்காக என்று சிலர் கருத்து கூறுகிறார்கள்?
இப்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை.
அனு பிரபாகர்
india today
கருத்துகள்
கருத்துரையிடுக