நவீன மார்க்கெட்டிங் உத்திகள் - வெற்றி பெற தேவையான ஸ்மார்ட் வார்த்தைகள்
நவீன மார்க்கெட்டிங் உத்திகள் என்ன?
காலம்தோறும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை உத்திகள் மாறி வருகின்றன. இதனை வல்லுநர்கள் குழு பன்னாட்டு நிறுவனங்களி்ல் வடிவமைத்து நிறுவனத்தை தரமான வாடிக்கையாளர்கள் மேல் பரிவுகொண்ட அக்கறையுள்ள நிறுவனமான மாற்றுகிறார்கள். இதை வைத்தே அந்நிறுவன பொருட்களின் விற்பனை எகிறுகிறது. உலகளவில் வெற்றிபெற்ற நடைமுறையில் உள்ள மார்க்கெட்டிங் விஷயங்களைப் பார்ப்போம்.
ஹியூமனைனிங்
இதனை ஓரியோ பிஸ்கெட்டுகளை உலகம் முழுக்க விற்கும் மாண்டெல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இவர்கள் ஓரியோ பிஸ்கெட்டுகள், பிலடெல்பியா க்ரீம் சீஸ் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர். ஹியூமனைனிங் என்பதை இவர்கள் மக்களிடம் உருவாக்கிக்கொள்ளும் இணைப்பு என்பதாக கருதுகிறார்கள். இனிமேல் பொருட்களின் விற்பனைக்காக மார்க்கெட்டிங் செய்வது கைகொடுக்காது என்கிறார்கள்.
அட்லாப்
விளம்பர நிறுனவனத்தின் உத்தி என்னவாக இருக்கும்? பொருட்களின் மார்க்கெட்டிங்தான். பொருட்களைப் பற்றிய கவனத்தை நாம் விளம்பரம் பார்க்கும்போது தவறவிட்டால் கான்செப்ட் சரியாக இருந்தாலும் அது வேலைக்கு ஆகாது என்றே அர்த்தம்.
பி4ஹெச்
இந்த சொல் பிசினெஸ் டு பிசினெஸ் பிசினெஸ் டு கன்ஸ்யூமர் என்பதிலிருந்து உருவானது. இதனை நாம் தவறாக புரிந்துகொண்டுள்ளோம். பிராண்டுகள் என்பவை மக்களுக்கானவை என்று கூறி பி4ஹெச் என்று கூறினார் விளம்பர உலகில் புகழ்பெற்றவரான பாப் லியோடைஸ்.
ஹைப்பர்டெல்லிங்
பொதுவாக விளம்பரத்திற்கான கான்செப்ட் பிடிக்கும் எழுத்தாளர்களை காப்பி எடிட்டர்கள் என்று கூறுவார்கள். அவர்கள் அதே கான்செப்டை வாடிக்கையாளர்களுக்கு விளக்கி சொல்லுவார்கள். அதனை அப்படியே மீம்சாக மாற்றிச் சொன்னால் எப்படியிருக்கும்? அதுதான் ஹைப்பர்டெல்லிங் என்பது.
அணிவதற்கான காரணம்
குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டுமே பயன்படுத்துவதற்கு ஒருவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். இதனை விலை, வெரைட்டி என்று மட்டும் அடையாளப்படுத்தி விட முடியாது. வாழ்க்கையில் உள்ள தனிப்பட்ட தொடர்பு என்று கூட குறிப்பிட்ட பிராண்டுகளை கருதி பயன்படுத்துவர்கள் உண்டு. இதனை பர்பஸ் டிரைவன் லைஃப்ஸ்டைல் பிராண்டு என்று கூறுவார்கள்.
ஸ்னாக்கபிள் கன்டென்ட்
ஸ்மார்ட்போன்களில் யூடியூபில் படம் பார்க்கு்ம்போது வரும் சின்ன வீடியோக்கள் பொருட்களை விளம்பரப்படுத்துகிறது அல்லவா? அதைத்தான் குறிப்பிடுகிறார்கள்.
தம்ப் ஸ்டாப்பிங்
இன்று அனைவரும் செல்போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். அதில் வரும் வீடியோக்களை வேகமாக கட்டைவிரலை அசைத்து மேலேற்றி விட்டு பார்ப்பவர்களே அதிகம். இதனை தடுக்கும்படி விஷயத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான் இப்போதுள்ள நிறுவனங்களுக்கான சவால். பின்டிரெஸ்ட், ஷட்டர்ஸ்டாக், சாம்சங் ஆகியோர் நாங்கள் இப்படித்தான் எங்கள் கன்டென்டை மக்களுக்கு கொண்டு செல்கிறோம் என்று சவால் விடுகிறார்கள். உண்மையா இல்லையாவென நீங்கள்தான் சோதித்து சொல்லவேண்டும்.
டிஎல்ஏ
மூன்று எழுத்துக்கள், குறியீடாக ஒன்றை கூறுவது ஆகியவற்றை டிஎல்ஏ என்பார்கள். ஓடிடியை ஓவர் தி டாப் என்பார்கள். அதுபோலவே இதனை த்ரீ லெட்டர் அக்ரோனிம் என்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக