நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு
உதய் சங்கர்
இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ்
அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம். எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை. இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை. நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம். ஹோட்டல், சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது. இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும்.
2021இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள்?
அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும். பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும். இதில் நல்ல செய்தி, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதான். சிறிய, நடுத்தர பெரிய தொழிற்சாலைகள் எவையும் உடனடியான இயல்புநிலைக்கு திரும்ப முடியாது. துறைசார்ந்து நேர்மறையான தாக்கம் எப்படியிருக்கும் என்பதும், பொருளாதாரம் மீளும் என்பதையும் உடனடியாக கூறுவது கடினம்.
பெருநிறுவனங்களுக்கு வங்கி தொடங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்படவிருக்கிறது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்.
நாட்டில் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர நிறைய வங்கிகள் தேவை. சரியான விதிமுறைகளை வகுத்தால், வங்கிகளை தொடங்குவதில் எந்த பிரச்னையும் கிடையாது. வெளிப்படைத்தன்மையை கொண்டுவர கவனமாக பாடுபடவேண்டும். அதேநேரத்தில் பொதுத்துறை வங்கிகளை பாதுகாத்து வலுப்படுத்துவதற்கான விதிமுறை அரசு வகுக்கவேண்டும்.
ஊடகத்துறை தொடர்பான அரசின் கொள்கைகள் பற்றி என்ன கருத்துகளை கொண்டிருக்கிறீர்கள்?
டிவி, நாளிதழ் என பல்வேறு வகை ஊடகங்களிலும் நான் வலியுறுத்துவது அதன் சந்தா தொகை குறிப்பிட்ட கால அளவில் உயரவேண்டும் என்பதைத்தான். அதனை கட்டு்ப்படுத்துவது கூடாது. அப்போதுதான் அத்துறை வளர்ச்சி பெறும். நான் கூறியது விளம்பரத்துறைக்கும் பொருந்தும். பெருந்தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்டது டிவி துறைதான். எனவே அதனை அதிக விதிமுறைகளை வைத்து கட்டுப்படுத்தக்கூடாது. வணிகம் வளர்ச்சி பெறுவதை மையமாக கொண்டே விலையை அரசு நிர்ணயிக்கவேண்டும்.
தகவல்தொடர்புத்துறையின் கீழ் ஓடிடி தளங்கள் வருவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
குறிப்பிட்ட விதிகளை அரசு விதித்து அதன் கீழ் ஊடகங்கள் இயங்கவேண்டும் என்பது பொருத்தமானதுதான். ஆனால் அந்த விதிமுறைகளில் எது முக்கியமானது என்பதை அரசு உறுதியாக குறிப்பிட வேண்டும்.
இந்த விதிகள் ஜனநாயகப்பூர்வத்தன்மையாக இருக்கவேண்டும். பல்வேறு மாற்றங்கள் தேவையென்றால் மாற்றிக்கொள்ளக்கூடியவையாக இருக்கவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக