பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவிருக்கிறோம்! - அதுல் சதுர்வேதி
அதுல் சதுர்வேதி
விலங்குகள் நலத்துறை செயலர் அதுல் சதுர்வேதி
விலங்குகள் மேம்பாட்டு நிதியகத்தை தொடங்கியிருக்கிறீர்களே?
இந்த அமைப்பு தனியார் துறையினர் பால், இறைச்சிக்காக முதலீடு செய்வதற்கானது. இந்த அமைப்பு மூலம் திட்டங்களை மேம்படுத்துவதால் இறைச்சிகளை பதப்படுத்துவது எளிதாகும். இதன் மூலம் பண்ணை விலங்குகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான இறைச்சி கிடைக்கும்.
உற்பத்திதிறன் பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
நீங்கள் கூறும் உற்பத்தித்திறன், பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன. நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பசு ஆதார் மூலம் பசுக்களின் எண்ணிக்கை அவற்றின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும், பால் உற்பத்தி என்பது கால்நடைகளுக்கு நோய் வராமல் இருப்பது மூலம்தான் சாத்தியம். அதற்காக அனைத்து பசுக்களுக்கும் அதாவது 4 முதல் எட்டு வயதானவற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் அவற்றின் நோய் கட்டுப்படுத்தப்படும்.
விவசாயிகள் தொழில்முனைவோர் போல வளர உதவி செய்து வருகிறோம். அவர்கள் கால்நடைகளுக்கான தீனிப்பயிர்களை வளர்த்து விற்கலாம். இதனை அவர்கள் பணப்பயிர் போல வளர்த்தால் லாப்ம் ஈட்டலாம்.
பெருந்தொற்று சூழ்நிலைதான் உங்களை செயற்கை முறையில் கால்நடைகளுக்கு கருவூட்டச்செய்யும் முயற்சியை செய்ய வைத்ததா?
செயற்கை கருவூட்டல் முறையில் 605 மாவட்டங்களிலுள்ள 300 கிராமங்களில் பசுக்களை கருவுறச்செய்துள்ளோம். கடந்த ஆண்டு செப். 2019 முதல் மே 2020 வரையிலான காலகதத்தில் இதனை செய்தோம். இதன் மூலம் 22.5 லட்சம் காளை, பசுக்களை உருவாக்கியுள்ளோம். இவையன்றி 11.5 லட்சம் பசுக்கள் மூலம் 13.5 லட்சம் டன் பாலை உற்பத்தி செய்துள்ளோம். 2021 மே மாதம் வரை கருவூட்டல் திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கு 1, 090 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா
விஸ்வா மோகன்
sep 2, 2020
கருத்துகள்
கருத்துரையிடுக