மென்பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை உருவாக்கிய முன்னோடி! - பில்கேட்ஸ் - சாப்ட்வேர் சுல்தான்

 

 

 

 

Bill Gates, Business Man, Microsoft

பில்கேட்ஸ்


சாப்ட்வேர் சுல்தான்


என் சொக்கன்



பில்கேட்ஸ் கிராப் இன்றுவரை உயரத்தில்தான் இருக்கிறது. இந்த நூலில் அவர் எப்படி உழைத்து ்வளர்ந்தார், சாப்ட்வேர் துறையில் என்ன செய்தார், அதற்கு என்ன வழிமுறைகளை கடைபிடித்தார், அவர் மீதான புகார்கள், ஒப்பந்தங்கள், நட்பு, விண்டோஸின் வெற்றி, சர்ச்சைகள், மென்பொருட்கள் விற்பனை, புகார்கள், அதற்கான எதிர்வினைகள், சந்தையில் அவர் ஏற்படுத்திய விளைவுகள் என பல்வேறு விஷயங்களையும் பாரபட்சமின்றி பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.


அனைவருக்கும் தனி கம்ப்யூட்டர் என்ற லட்சியத்தை முன்வைத்து பில்கேட்ஸ் விண்டோஸ் நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். அந்த வழியில் அவர் சந்தித்த சவால்கள்ளளை தாண்டி வர தெளிவான வணிகத்திட்டம் அவருக்கு உதவியது. ஆரம்பத்தில் அவர் மென்பொருட்களை எழுதினாலும் பின்னாளில் அவர் முழுக்க மார்க்கெட்டிங் செய்து விண்டோஸ் பொருட்கைள விற்பனை செய்பவராகவே இருந்தார். அவரது இளமைக்காலம் பற்றி படிப்பது சிறப்பாக உள்ளது.


இனிமேல் பில்கேட்ஸ் என்று ஒருவர் வரமுடியாது. அவரின் காலம் முடிந்துவிட்டது. கணினி தொழில்நுட்ப உலகில் உள்ளே வரும் சமயம் அதனை ஒருவர் எப்படி பயன்படுத்திக்கொண்டு முன்னேறுகிறார் என்பதுதான் நூலின் மையம்.


பில்கேட்ஸின் வெற்றி என்பது விண்டோஸ் நிறுவனத்தை உருவாக்கியதல்ல. மென்பொருட்களை ஒருவருக்கொருவர் விலையின்றி பகிர்ந்துகொண்டிருந்தபோது, அதனை காசுக்குத்தான் கொடுப்பேன் என உறுதியாக நின்று அதனை விற்றுக்காட்டி அதற்கான சந்தையை உருவாக்கினார். அதுதான் அவரது முக்கியமான சாதனை. இணையத்தை மைக்ரோசாப்ட் தாமதமாக கண்டுகொண்டு சந்தைபங்களிப்பை இப்போது மெல்ல இழந்துகொண்டிருக்கிறது. கூகுள் மைக்ரோசாப்ட் எப்படி மேலேறி வந்ததோ அதே முறையில் வளர்ந்து வருகிறது. வித்தியாசம் என்னவென்றால், பல்வேறு எதிர்கால சாத்தியக்கூறுகளை முன்னமே கண்டுபிடித்து வருகிறது என்பதுதான்.


மேக்கிடம் பில் கற்றுக்கொண்டு விஷயங்கள், தாய் அவருக்கு சமூகத்திற்கு ஏதாவது செய் என்று கேட்டுக்கொண்டது, மெலிண்டாவை திரும்ணம் செய்துகொண்டது, அவரின் வீட்டை தொழில்நுட்ப முறையில் வடிவமைத்துக் கட்டியது, ஐபிஎம், மிட்ஸிடம் செய்யும் வணிக ஒப்பந்தங்கள், இணைய உலவியை ஓஎஸ்ஸோடு இணைத்துகொடுப்பது, பல்வேறு மென்பொருட்களை தானாகவே ஓஎஸ்சுடன் இணைத்து வழங்குவது, பல்வேறு வழக்குகளை சந்திப்பது ஆகியவை நூலி்ன் முக்கியமான பகுதிகள்.



மென்பொருட்கள் துறையை வளர்த்தெடுத்து வெற்றி கண்டவர்களின் பில்கேட்ஸ் முக்கியமானவர் என்பதை மறக்க முடியாது.


சுல்தானுக்கு சல்யூட்


கோமாளிமேடை டீம்





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்