ஏழை நாடுகளில் மேற்கு நாடுகள் செய்யும் மாசுபாட்டு யுத்தம்! - பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் அபாயம்

 

 

 

Cuba, Oldtimer, Havana, Old Car, Classic, Old, Auto



பயன்படுத்தப்பட்ட கார்கள் ஏற்படுத்தும் விளைவுகள்!


அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.


வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தப்பட்ட அதிக மாசுபடுதல் கொண்ட கார்களை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்பது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான ஐ.நா அமைப்பின் சூழல் திட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்மூலம் வளர்ந்துவரும் நாடுகள் அதிக மாசுபாட்டையும், பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும்.


.நா அறிக்கைப்படி, 2015-2018 காலகட்டத்தில் 1.4 கோடி பயன்படுத்தப்பட்ட கார்கள் வல்லரசு நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதியாகியுள்ளன. இந்த நாடுகளில் பாதுகாப்பு, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் வலிமையாக இல்லாததால், பழைய கார்களை எளிதாக விற்க முடிகிறது.


அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஏழை, மத்திய வருமானம் கொண்ட நாடுகளில் நிகழும் 90 சதவீத வாகன விபத்துகளை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் மொத்த விவகாரமும் தெளிவாகும். பயன்படுத்தப்பட்ட மலிவான கார்களின் சொர்க்கமான ஆப்பிரிக்க நாடுகளில் விபத்துகள், பலி என இரண்டுமே அதிகரித்து வருகின்றன.. இந்த வாகனங்கள் அதிக புகையை வெளியிடுவதோடு, எரிபொருள் செலவையும் அதிகரிக்கிறது. 2050க்குள் கார்பன் அளவைக் கட்டு்ப்படுத்தும் கொள்கை முடிவை கொண்டுள்ள ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவையும் கூட பழைய கார்களை அதிகளவு ஏற்றுமதி செய்துவருகின்றன.


அனைத்து நாடுகளும் மாசுபட்ட கார்களுக்கு எதிராக சரியான பாதுகாப்பு மற்றும் சூழல் சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்குவது சிறப்பானது. இதன்மூலம் வளரும் நாடுகளுக்கு மாசுபாடற்ற கார்கள் குறைந்த விலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மாசு்பாடுள்ள கார்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வல்லரசு நாடுகள் வெப்பமயமாதல், கார்பன் வெளியீடு ஆகிய சிக்கல்களிலிருந்து தப்பிவிட முடியாது. '’’விற்கும் வாங்கும் நாடுகள் என இரண்டு தரப்புமே இந்த விவகாரத்தில் தங்களது பொறுப்பை உணர்வது முக்கியம்’’ என்கிறார் ஐ.நா அமைப்பின் போக்குவரத்துதுறை தலைவரான ராப் டி ஜோங்.


தகவல்

vox.


https://www.vox.com/21536763/climate-change-africa-un-used-cars-environment


நன்றி

தினமலர் பட்டம 


படம் 


பிக்ஸாபே


கருத்துகள்