சீர்திருத்தங்கள் தேவை என முதலில் அறிக்கை வெளியிட்டது விவசாய சங்கங்கள்தான்! - பியூஷ் கோயல்

 

 

 

 

 

It is the mindset of people opposing bullet train, the ...

பியூஷ் கோயல்- indian express 

 

 

 

 

 

உணவு மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள் துறை அமைச்சர்


பியூஷ் கோயல்


தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் விவசாய சட்டம் எப்படி அவர்களுக்கு அதிகளவு வருமானத்தை உருவாக்கித்தரும்?


தனியாரிடம் பொருட்களை விற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசிடமும் கூட குறைந்த பட்ச கொள்முதல் விலைக்குட்பட்டு பொருட்களை விற்கலாம். தனியார் நிறுவனங்களோடு அரசும் விற்பனையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வசீகரமான விலைகளை கொடுத்து பொருட்களை விற்க வைக்கலாம்.


விவசாயிகள் மின்சார மசோதாவையும் கூட திரும்ப பெற கூறிவருகிறார்களே?


அவர்கள் கூறும் பல்வேறு விஷயங்களை அரசு கவனத்துடன் கேட்க தயாராகவே உள்ளது. அவர்கள் திரும்ப பெறும் மின்சார மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது. சட்டமாக இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை. இந்த சட்டம் அமலானாலும் கூட விவசாயிகள் தாங்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணம் பெரியளவில் மாற்றப்படமாட்டாது.


அறுவடைக்கழிவுகளை விவசாயிகள் எரித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?


நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு இப்படி பதில் தாக்கல் செய்துள்ளது. இதுவும் கூட தொழிற்சாலை மாசுபாடுகளைக் குறைக்கும் விதமாகவே பதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விவசாயிகளின் தரப்பு வாதத்தை அரசு கவனித்து கேட்கும்.


விவசாய சங்கங்கள் இப்போது மீண்டும் ரயில்வே பாதைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?


விவசாய சங்கங்கள் இப்படி ரயில்வே பாதைகளை மறித்து போராட்டம் நடத்துவதை நான் விரும்பவில்லை. இதனால் ராணுவப்படைகள், மக்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.


எதிர்கட்சிகள் விவசாய மசோதாக்கள் பற்றி விவாதிக்கவே இல்லை என்று விமர்சிக்கிறார்கள்?


இன்று விவசாய சங்கங்கள் எதிர்க்கும் திருத்தங்கள் இருபது ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றவைதான். விவசாயி ஒருவரின் மகன் கூட தனது தந்தை இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த சட்டத்திற்காக போராடினார். அவரின் ஆன்மா சாந்தியடையும் என்று பேசியுள்ளார். 2018-19இல் கிசான் அறிக்கையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதீய கிசான் யூனியன் இதுபற்றி ஏப்ரல் 2019இல் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது. அவர்கள் எபிஎம்சி எனும் மண்டி சட்டத்தை நீக்கவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இந்த சட்டங்களை நீக்குபவர்களை இச்சங்கம் ஆதரிக்கும் என தெரிவித்து காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர். நாங்கள் இப்போதும் கூட இந்த சட்டங்களை முழுமையாக நீக்கவில்லை. தாராள வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். முந்தைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த சரத்பவார் உருவாக்கிய சட்டத்தில் நாங்கள் எதையும் மாற்றவில்லை. நாங்கள் முதலமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை கூட்டி அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுத்தான் விவசாயிகளை காப்பாற்ற முடியுமா என்று பார்த்து சட்டத்தை உருவாக்கியுள்ளோம். எதிர்க்கட்சிகள் இதனை தெரிந்துகொண்டே விவசாயிகளை போராடத் தூண்டிவிட்டிருக்கின்றன. விவசாயிகள் இந்த புதிய மாற்றங்களை விரைவில் தெரிந்துகொள்வார்கள் என்று கருதுகிறோம்.




டைம்ஸ் ஆப் இந்தியா


டிச.12.2020


சித்தார்த்தா, விஷ்வ மோகன், அகிலேஷ் சிங்



கருத்துகள்