இந்திய அரசு தொடங்கியுள்ள ஊட்டச்சத்து திட்டம் ஏழை குழந்தைகளுக்கு உதவுகிறது! போஷான் ஊட்டச்சத்து திட்டத்தின் நிலை!
ஆரோக்கியமான இந்தியா!
மத்திய அரசு தொடங்கியுள்ள போஷான் ஊட்டச்சத்து திட்டம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வயதிற்கேற்ற உயரம், எடையில் இருப்பதை உறுதி செய்கிறது.
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் போஷன் மா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு ஊட்டச்சத்தான உணவுகள் பற்றி ரெசிபிகளை பகிர்வது, தாய்மார்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை நாடெங்கும் தொடங்கின. உண்மையில் இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு ஊட்டச்சத்து பாதிப்பு குறையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்திய அரசின் திட்டம், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பட்டினியைப் போக்கி அவர்களை வலிமையுள்ளவர்களாக மாற்றுவதுதான். உலகம் முழுவதும் 67.3 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவின் பங்கு 28 சதவீதம். அதாவது 18 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017-19ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை (UNICEF,WHO)) கூறுகிறது. இந்த அறிக்கையில் வயதுக்கேற்ற உயரம், எடை இல்லாத ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா 28%, 43% அளவில் உள்ளது தெரிய வந்துள்ளது. சீனா, பிரேசில் நாடுகளில் ஊட்டச்சத்து பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 14 சதவீதமாக உள்ளது.
2015-16ஆம் ஆண்டுகளில் தேசிய குடும்பநல ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாகவும் (35.8%), வளர்ச்சி குறைவாகவும்(38.4%) என்ற அளவில் இருந்தனர். பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 40 சதவீத குழந்தைகள் உள்ளனர். இந்த அவலநிலையை களையவே தேசிய ஊட்டச்சத்து திட்டமான போஷன் அபியான் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை ஆண்டுக்கு 2 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பாதிப்பை 3 சதவீதமாக குறைக்க அரசு நினைத்து, 2022க்குள் இதனை சாத்தியப்படுத்த உழைக்கிறது. ஆனால் இப்போதுள்ள நிலையில் மாற்றம் ஏற்படாதபோது, இந்த இலக்கை அரசு எட்டுவது மிக கடினம்.
ஊட்டச்சத்து பிரச்னையில் மறைமுகமாக தாயாரின் கல்வி, குழந்தையின் உணவுப்பழக்கம், சுகாதாரம் ஆகிய அம்சங்களையும் கவனிப்பது அவசியம். தேசிய குடும்பநல ஆய்வின் (2015-16) அடிப்படையில் பெண்களின் உயர்கல்வி 13.6 சதவீதம் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளது. குழந்தைகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிவறை ஆகியவை ஊட்டச்சத்து பெறுவதில் முக்கியமானவை. உலக விவசாய ஆராய்ச்சி அமைப்பு((CGIAR)), இந்திய விவசாய ஆராய்ச்சி கௌன்சிலோடு((ICAR)) இணைந்து துத்தநாகம், இரும்பு ஆகிய சத்துகள் கொண்ட அரிசி, கோதுமை, பீன்ஸ், தினை ஆகியவற்றை உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய விழிப்புணர்வை தாய்மார்களுக்கு ஏற்படுத்தினால் மட்டுமே ஊட்டசத்துக்குறைவு பிரச்னையை இந்தியா தீர்க்க முடியும்.
தகவல்
IE
https://indianexpress.com/article/opinion/columns/poshan-maah-india-malnutrition-index-global-hunger-index-6594794/
thanks
dinamalar pattam
கருத்துகள்
கருத்துரையிடுக