பியோனா மூலம் கடந்த கால வாழ்க்கையை கண்டுபிடிக்கும் அடியாள்! - அன்லீஸ்டு
அன்லீஸ்டு
நடிப்பு, தயாரிப்பு ஜெட்லீ
கந்துவட்டி தலைவனின் நாய் போல வளர்க்கப்படும் இளைஞனின் முன்கதையை அவன் அறிந்துகொள்ளும்போது என்னாகிறது என்பதுதான் படத்தின் மையக்கதை.
டேனியாக ஜெட்லீ அப்பாவித்தனமும், கழுத்திலுள்ள பெல்ட்டை அவிழ்த்தால் வெறிநாயாக மாறி எதிரிகளை அடித்து பிளந்து நடித்திருக்கிறார். வெறும் அடிதடி மட்டுமன்றி, தனது தாய் யார் என்று தெரிந்துகொள்ளும் தவிப்பிலும், தனது ஆதரவளிக்கும் பியானோ மெக்கானிக்கின் வளர்ப்பு மகள் மீதான பிரிய முத்தத்தை சிரித்தபடியே ஏற்பது, தாயின் இறப்பிற்கு காரணமான கந்து வட்டி தலைவனை அடித்து பிளப்பது என நடிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார் .
உளவியல் ரீதியான கடுமையாக பாதிக்கப்பட்ட மனிதராக டேனி உள்ளார். அவரை மெல்ல இசைமூலம் நடப்பு உலகிற்கு விக்டோரியா என்ற பெண் இழுத்து வருகிறார். அதற்கு தடையாக இருப்பது கந்துவட்டித் தலைவன். அவனை எப்படி டேனி தன்னுடைய வாழ்க்கையிலிருந்து அகற்றுகிறான் என்பதுதான் இறுதிப்பகுதி.
விக்டோரியா டேனியை எப்படி காதலனாக ஏற்கிறாள் என்பது நிறைய இடங்களில் பொருந்தாதது போலவே உள்ளது. மனத்தளவில் டேனி சிறுவனாகவே இருப்பதோடு, நிஜ உலகில் நடைபெறும் வன்முறையை இயல்பாகவே எடுத்துக்கொள்பவனாகவும் இருக்கிறாள். ஆனால் உணவை சாப்பிடுவது தொடங்கி எல்லாவற்றுக்கும் தடுமாறுபவனை இசை மெல்ல மென்மையானவனாக மாற்றுகிறது.
பியானோ சார்ந்து தனது சிறுவயது வாழ்வை நினைவுபடுத்
இதில் மிரட்டலான நடிப்பு என்றால் கந்துவட்டித்தலைவன்தான். காசு கிடைக்கும் என்றால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உணர்ச்சிகரமாக பேசி டேனியை வளைப்பது, அடிவாங்கி மூக்குடைந்து ரத்தம் சிந்திக்கொண்டே அடுத்தபடியாக வட்டி வசூலிக்கும் இடத்திற்கு செல்வது என தான் கொண்ட லட்சியத்தில் பேராசையில் பின்வா்ங்காத ஆளாக மிரட்டுகிறார்.
வன்முறைக்கு மருந்து இசை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக