தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்
ஜக்தீப் தன்கர்
மேற்குவங்க ஆளுநர்
மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே?
மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதி. அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே?
நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன்.
ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார். அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை.
நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்று புகார் கூறுகிறாரே?
மத்திய அரசின் பிஎம் கிசான், ஆயுஷ்மான் பாரத் திட்டங்கள் மாநில அரசு செயல்படுத்தவில்லை. இதற்கு நான் என்ன செய்யமுடியும்? மாநில நிதியமைச்சர் தான் கூறும் புகார் தொடர்பாக என்னைச் சந்தித்து பேசவில்லை.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வணிக மாநாடு பற்றிய கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பதில் சொல்லவில்லை என்று நினைக்கிறீர்களா?
ஆமாம். அந்த மாநாடு ஒரு பெரிய மோசடி. இதுபற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிதியமைச்சர் அமித் எந்த பதிலையும் தரவில்லை. அரசு பிடிவாதமாக தனது வழியில் செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
கோவிட் காலத்தில் கூட மத்திய அரசு ரூ.200 கோடிக்கும் குறைவாகவே நிதியளித்ததாக கூறப்படுகிறதே?
மேற்கு வங்கம் மட்டுமன்றி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதியளிக்க ஒரேவிதமாக அமைப்புமுறையை பின்பற்றுகிறது. மேற்கு வங்க அரசு மத்திய சுகாதார குழு உள்ளே வர அனுமதி அளிக்கவில்லை. இதற்கு யார் பொறுப்பு? மேலும் சுகாதார கருவிகளை வாங்குவதில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் செய்துள்ளனர். இதுபற்றிய விசாரணை குழுவின் அறிக்கை இன்னும் வரவில்லை.
தி வீக்
ரபி பானர்ஜி
கருத்துகள்
கருத்துரையிடுக