இடுகைகள்

சிட்ரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிட்ரிக் அமிலம் உடலுக்கு நன்மை தருமா?

நன்மை தருமா? இயற்கையாக எலுமிச்சை,  ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றிலிருந்து சிட்ரிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்போது அதில் வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக இருக்கும். 1784 ஆம் ஆண்டு ஸ்வீடனில் எலுமிச்சையிலிருந்து தூய வடிவில் சிட்ரிக் அமிலம் இருப்பது கண்டறியப்பட்டது. சீஸ், ஒயின், பிரெட் ஆகியவற்றில் இயல்பாகவே சிட்ரிக் அமிலம் உருவாகிறது. இயற்கையில் நிறைய கிடைத்தாலும் பல்வேறு பதப்படுத்தல் பணிகளுக்காக சிட்ரிக் அமிலம் தொழிற்சாலைகளிலும் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக உணவில் நறுமணம், சுவை, கெட்டுப்போகாமல் இருக்க சிட்ரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. குளோஸ்ட்ரியன்ம பாட்லினம் என்ற பாக்டீரியாவை எதிர்த்து செயல்படுவதால் உணவுப்பொருட்களில் பயன்படுகிறது. குளிர்பானங்கள், உணவுகளுக்காக 70 சதவீதம் சிட்ரிக் அமிலம் பயன்படுகிறது. பிற உபயோகங்களுக்கான(அழகுசாதனங்கள், பால்பண்ணை) எஞ்சியவை பயன்படுகின்றன. பயன்கள் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, சிறுநீரக கற்களை அகற்றவென பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. நன்றி: ஹெல்த்லைன்