இடுகைகள்

சில்வியா ரிவேரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் கவனத்தை சர்ச்சைகளால் ஈர்த்த போராட்டக்காரி! - சில்வியா ரிவேரா

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 2 உரிமைக்காக குரல் கொடுத்த சர்ச்சைப் போராளி! சில்வியா ரிவேரா அமெரிக்காவில் பிறந்த லத்தீன் நாட்டுக்காரர். அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவருக்கான அமைப்பை உருவாக்க முயற்சித்தவர். 1951 ஆம் ஆண்டு பிறந்தவர், 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் வீடற்ற மக்களுக்காக கோரிய காப்பக வசதி கோரிக்கை முக்கியமானது. நியூயார்க் நகரில் இதற்காக பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். வெனிசுலா நாட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவரின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரின் தந்தை இவரின் மூன்று வயதிலேயே சில்வியா ரிவேராவைக் கைவிட்டுச்சென்றுவிட்டார். இவரது தாய் தற்கொலை செய்துகொண்டுவிட, காப்பாற்றி வளர்த்தது வெனிசுலாவில் வாழ்ந்த பாட்டிதான். ஆனால் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாக உணர்ந்தவர், லிப்ஸ்டிக்கை எடுத்து பூசி பவுடர் போட்டு அழகு பார்த்தார். ஆனால் அது மரபு வழியில் வளர்ந்த பாட்டிக்கு பிடிக்கவில்லை. கேட்டுப்பார்த்தும் சில்வியாவுக்கு பாட்டி வழியில் வளரமுடியவில்லை. எனவே பாட்டி வீட்டை விட்டு துரத்த, பதினொரு வயதில் தெருவில் வாழ்க்கை தொடங்கியது. ஆணோ, பெண்ணோ வயிறு ஒன்றுதானே?