நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்
டிரெய்ன் டு பூஸன் 2016 Director: Yeon Sang-ho Sequel: Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது. காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்