இடுகைகள்

எம்எஸ்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்ட்ரா புரோசசஸ்ட் ஃபுட்ஸ்! - பதப்படுத்தப்பட்ட பொருட்களில் என்ன இருக்கிறது?

படம்
  நுட்பமாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குழந்தை உணவுகள், கார்பன் பானங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்க், பிரட், காலை உணவாக சாப்பிடும் உணவுகள், இனிப்புகள், உடனடியாக சூடு செய்து உண்ணும் உணவுகள்   இந்த வகைமையில் வரும். பழச்சாறு சார்ந்த பொருட்கள், மால்டோடெக்ஸ்ட்ரின், டெக்ஸ்ட்ரோஸ், கோல்டன் சிரப், சோயா புரதம், நீரேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள், குளூட்டேன், மோனோசோடியம் குளுட்டமேட், செயற்கை நிறமிகள், அடர்த்திக்காக சேர்க்கும் வேதிப்பொருட்கள், கெடாமல் வைத்திருக்கவும், செரிமானத்திற்காகவும் சேர்க்கப்படும் பொருட்களும் இதில் உண்டு. நுட்பமாக பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, அடிமைப்படுத்தும் விதமான பொருட்கள் உள்ளன. இதன் விளைவாக ஒருவருக்கு உடல் பருமன், இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதயதசை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உணவுகளில் புரதம், ஜிங்க்,, மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி,டி, இ, பி12 ஆகியவை குறைவாக இருக்கும். வயிற்றில் உள்ள செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை இந்த உணவு பாதிக்கிறது. காமில் அஹ்மது கார்டியன் வீக்லி படம் - பின்டிரெஸ்ட்

பெயர் அச்சிடுவதில் உருவான வெட்க கேடான அலுவலக அரசியல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  நான் இருவேளை வெளியிலும் ஒருவேளை அறையிலும் சமைத்து சாப்பிடுகிறேன். இதற்கு மட்டுமே நேரம் உள்ளது. இன்ஸ்டன்ட் உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அத்தகைய உணவுப் பொருட்களில் எம்எஸ்ஜியை வெவ்வேறு பெயர்களில் சேர்க்கிறார்கள். வியாபாரம் என்றால் ஆறு பொய், நான்கு உண்மை சொல்வோம் என்பார்கள். இங்கு சொல்வது, அத்தனையும் பொய்யாக உள்ளது.  மதிய வேளையில் மெல்ல வெயில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் கோ ஆர்டினேட்டர் பெயரை நாளிதழில் ஆசிரியர் போடவேயில்லை.  ஆசிரியர் மீது காட்ட முடியாத கோபத்தை அவருக்கு அடுத்த இடத்தில் பெயர் உள்ள என்மீது கொட்டுகிறார்  கோ ஆர்டினேட்டர். புறணி பேசுவது, சாடை பேசுவது, வன்மத்துடன் பழி போடுவது என சபை நாகரிகம் இன்றி வசை பாடி வருகிறார். ஆனால் இப்படி வன்மத்தாக்குதல் நடப்பதை சக உதவி ஆசிரியர்கள் அமைதியாக பார்த்தனர். நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் எனக்கு நேரும் பிரச்னைகளுக்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்படி வசை பாடுவது பட்டம் இதழுக்கு புதிதல்ல. இதற்கான

மயிலாப்பூர் டைம்ஸ் - வந்தே ஏமாத்துறோம் - 2

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்   வந்தே ஏமாத்துறோம் அல்டிமேட் லெஜண்ட்ஸ் 2 அலர்ஜி பிரச்னையால் கிழங்குகள், மைதா பொருட்கள் சாப்பிடக்கூடாது என சித்த மருத்துவர் ரெஜூ தீவிரமாக உத்தரவிட்டுவிட்டார். இதனால் என்ன செய்வது என்ற தெரியவில்லை. காரணம், என்னவென்றால் கடைகளுக்கு சென்றாலே அங்கு இருக்கும் பத்து ரூபாய் பிஸ்கெட் தொடங்கி உயரக ப்ரீமியம் தின்பண்டங்கள் வரை மைதாவும், பாமாயிலும்தான் நீக்கமற இருக்கும்.  இந்த நேரத்தில் தான் சரி, ஓட்ஸை சாப்பிட்டு பார்க்கலாமே என்று தோன்றியது. இதற்காக முதன்முறையாக குவாக்கரில் சீசன் மிக்ஸ் உள்ள பாக்கெட்டை 50 ரூபாய்க்கு வாங்கினேன். இருநூறு கிராம் என்று நினைவு.  இதில் மிக்ஸூம், ஓட்ஸூம் அந்தளவு சரியாக ஒன்றாக சேரவில்லை. பரவாயில்லை என்று சமாளித்து சாப்பிட்டேன். அப்புறம் இதற்கு வேறு மாற்றாக பிராண்டைத் தேடும்போது தீயூழாக கிடைத்ததுதான் சஃபோலா ஓட்ஸ். மாரிகோ பெருநிறுவனம்தான் இதன் தாய் நிறுவனம். இவர்கள் பெப்சிகோவை விட திட்டமிட்டு தீர்மானமாக சந்தையில் களமிறங்கியிருந்தனர். பதினைந்து ரூபாய் பாக்கெட்டைத் தான் மார்க்கெட்டில் விற்றனர். அதுபோல பிளெயின் ஓட்ஸூம் உண்டு. கூடவே கெலாக்ஸ் நிறுவனமும் இருந்