இடுகைகள்

சீட்பெல்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய்களுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் பிடிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      1. ஸ்காட்லாந்திலுள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து நாய்கள் தற்கொலை செய்துகொள்கின்றன . ரியல் : இந்த மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை . ஸ்காட்லாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலம் ஒன்று உள்ளது . அதன் பெயர் ஓவர்டூன் . இங்கு செல்லும் நாய்கள் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன என்று கூறப்பட்டது . இதில் தற்கொலை என்பது மனிதர்களால் கூறப்பட்ட கருத்து . ஆனால் அங்கு சென்ற நீளமான மூக்கு கொண்ட மோப்பசக்தி அதிகமுள்ள நாய்கள் மட்டுமே கீழே எட்டிக்குதித்துள்ளன . பிற விலங்குகளின் வாசத்தை மோப்பம் பிடித்த நாய்கள் கீழே தட்டையான பரப்பு உள்ளது என தவறாக புரிந்துகொண்டு குதித்துள்ளன என்றார் நாய்களின் குணங்களை ஆராய்ந்து வரும் ஆய்வாளர் டேவிட் சாண்ட்ஸ் . இருண்ட , மேகங்கள் சூழ்ந்த , வறண்ட காலநிலை கொண்ட நேரங்களில் நாய்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் , தீயசக்தியும் இதற்கு காரணம் என பல கருத்துகள் கூறப்படுகின்றன . இதுவரை 50 க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த பாலத்திலிருந்து கீழே குதித்து இறந்துள்ளன . 2. பள்ளிப் பேருந்துகளில் மாணவர்களுக்கு சீட் பெல்ட்டுகள் தேவையில்லை ! ரியல் : அவசியமில்ல