இடுகைகள்

எதிர்கால உணவு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2028: எதிர்கால உணவு என்ன?

படம்
2028 : நமது உணவு என்ன? 1928 ஆம் ஆண்டுக்கு முன்பு பபுள்கம் என்றால் யாருக்கும் தெரியாது. 1930 ஆம் ஆண்டின் பிற்காலத்திலும் ஐஸ்க்ரீம்கள் அறிமுகமாயின. 1800 களில் ஸ்காட்லாந்து மருத்துவர் ஜோசப் லிண்ட், எலுமிச்சைப்பழங்களை உணவில் பயன்படுத்தினால் ஸ்கர்வி நோயை தடுக்கலாம் என்ற கண்டுபிடிப்பினால், எலுமிச்சை கடல் பணியாளர்களுக்கு ரேஷனில் வழங்கப்பட்டது. ஒருவரின் உடல் சர்க்கரையை அதிகரிப்பதில் மாவுப்பொருட்களுக்கு பெரும் பங்குண்டு. 2015 ஆம்ஆண்டு 800 பேர்களுக்கு செய்த ஆய்வில் சிலருக்கு ஐஸ்க்ரீம் (அ) அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை உயருவது தெரியவந்தது. அடுத்த பத்தாண்டுகளில் உடல்நலனுக்கான பரிந்துரை ஒவ்வொருவரின் உள்ளுறுப்புகளின் இயற்பியல், மரபணுக்களைப் பொறுத்து மாறும். “உங்களுடைய டிஎன்ஏவைப் பொறுத்து நீங்கள் சாப்பிடும் காய்கறிகள், பழங்களை பரிந்துரைப்பது ஈஸி” என்கிறார் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ப்ளூம்பெர்க். தற்போதே குறிப்பிட்ட சத்துக்களுடன் பழங்கள், காய்கறிகளை விளைவிக்க தொடங்கிவிட்டனர். வாழைப்பழத்தில் விட்டமின் ஏ சத்துக்களை இணைப்பது. உகாண்டாவில் இம்முறையில் ஊட்டச்ச