2028: எதிர்கால உணவு என்ன?


2028 : நமது உணவு என்ன?


Image result for future foods


1928 ஆம் ஆண்டுக்கு முன்பு பபுள்கம் என்றால் யாருக்கும் தெரியாது. 1930 ஆம் ஆண்டின் பிற்காலத்திலும் ஐஸ்க்ரீம்கள் அறிமுகமாயின. 1800 களில் ஸ்காட்லாந்து மருத்துவர் ஜோசப் லிண்ட், எலுமிச்சைப்பழங்களை உணவில் பயன்படுத்தினால் ஸ்கர்வி நோயை தடுக்கலாம் என்ற கண்டுபிடிப்பினால், எலுமிச்சை கடல் பணியாளர்களுக்கு ரேஷனில் வழங்கப்பட்டது.
ஒருவரின் உடல் சர்க்கரையை அதிகரிப்பதில் மாவுப்பொருட்களுக்கு பெரும் பங்குண்டு. 2015 ஆம்ஆண்டு 800 பேர்களுக்கு செய்த ஆய்வில் சிலருக்கு ஐஸ்க்ரீம் (அ) அரிசி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை உயருவது தெரியவந்தது. அடுத்த பத்தாண்டுகளில் உடல்நலனுக்கான பரிந்துரை ஒவ்வொருவரின் உள்ளுறுப்புகளின் இயற்பியல், மரபணுக்களைப் பொறுத்து மாறும்.

“உங்களுடைய டிஎன்ஏவைப் பொறுத்து நீங்கள் சாப்பிடும் காய்கறிகள், பழங்களை பரிந்துரைப்பது ஈஸி” என்கிறார் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ப்ளூம்பெர்க். தற்போதே குறிப்பிட்ட சத்துக்களுடன் பழங்கள், காய்கறிகளை விளைவிக்க தொடங்கிவிட்டனர். வாழைப்பழத்தில் விட்டமின் ஏ சத்துக்களை இணைப்பது. உகாண்டாவில் இம்முறையில் ஊட்டச்சத்து குறைவை போக்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

சோளத்தில் மெத்தியோனைன், கேரட்டில் கால்சியம், அரிசி - உருளைக்கிழங்கில் புரதம் ஆகியவை நிறைந்துள்ளது போல ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கத் தொடங்கியுள்ளனர். அலர்ஜி உருவாக்காத வேர்க்கடலை, சோயா ஆகியவற்றை தயாரிப்பது அடுத்த சோதனை. சூழலுக்குகந்த ஆர்கானிக் பால், இறைச்சி தயாரிப்பு ஆகியவற்றின் தயாரிப்பும் சோதனையும் அடுத்த இடத்தில் உள்ளன. இன்று உலகில் 40 சதவிகிததினருக்கு உடல்பருமன், நீரிழிவு பிரச்னை உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளிலுள்ள உப்பு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி கலோரியினை குறைத்தால் மட்டுமே உடல்பருமன் பிரச்னையிலிருந்து ஒருவர் வெளியேறமுடியும்.
எதிர்காலத்திற்கான சமையலறையும் படு ஸ்மார்ட்டாக மாறத்தொடங்கியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மோல்லி ரோபாட்டிக்ஸ் ரோபாட்டிக்ஸ் கிச்சனை தயாரிக்க தொடங்கியுள்ளது. ரெசிபி கேட்டலாக்படி உணவுகளை மனிதர்களின் அசைவுகளை 129 சென்சார்கள் மூலம் காப்பியடித்து ரோபோ நமக்கான உணவை தயாரிக்கும்.  இதற்கடுத்து 3டி பிரிண்டர் வருகிறது. இதில் தேவையான பீட்ஸா உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரிக்க முடியும்.