வெப்பகதிர்வீச்சு கேமராவை தயாரிக்கும் அமெரிக்கா!
சூரியப்பார்வை!
அமெரிக்க ராணுவ வீரர்கள் இரவுப்பணிகளின்போது
சக்தியோடு செயல்படும்படி புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். தெர்மல் இமேஜிங்
சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை இயற்பியலாளரான கிரிஸ்டன் குர்டன், மின்னணு பொறியியலாளரான
சீன் ஹியூ ஆகியோர் உருவாக்கி, கும்மிருட்டிலும் ராணுவ வீரர்கள் துடிப்புடன் செயலாற்ற
உதவியுள்ளனர்.
வெப்பகதிர்வீச்சு கேமிரா மூலம்
மனிதர்கள், நிலப்பகுதி, பொருட்களை அடையாளம் காண்கிறது. “30 ஆண்டுகளுக்கு முன்பே புல்,
மண், மரங்கள் வெப்பக்கதிர்களை வெளியிடுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.”
என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் குர்டன். வெப்பக்கதிர்வீச்சு கேமரா சோதனையில் தந்த
தீர்வுகளை, மனிதர்களின் முகங்களை கணிக்கும் தொழில்நுட்பத்துடன் இணைத்தபோது அடையாளம்
காணும் முயற்சியின் முடிவுகள் சிறப்பாக இருந்தன. “சிறப்பான முடிவுகளை தரும் போலாரிமெட்ரிக்
கேமராக்களை உருவாக்குவதே எங்களது நோக்கம். வெப்பக்கதிர்வீச்சு கேமராக்களைவிட இவை சிறப்பான
பயன்களை தருகின்றன” என்கிறார் குர்டன். எதிர்காலத்தில் வெப்பக்கதிர்வீச்சு கேமராக்கள்
போலாரிமெட்ரிக் வகை கேமராக்களாக மாறி செயல்படும் நிலையும் வரக்கூடும்.