இடுகைகள்

கடல்நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம்!

படம்
cc  எதிர்காலம் இப்படித்தான்!   கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம். பலருக்கும் இப்படி ஒரு தலைப்பைக் கேட்டதும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் கார்பனைக் குறைக்கும் திட்டத்தில் அணுஉலைகள் நிறைய உதவ முடியும். பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்தால் பிரிட்டன், அ்மெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா அணு உலை திட்டங்களை செய்துகொண்டிருக்கும். அணுஉலைகள் என்பதன் மறைவில் புளுட்டோனியம், யுரேனியம் ஆகியவற்றை செறிவூட்டி அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆணால் மேற்சொன்னவற்றுக்கு மாற்றாக தோரியத்தை ரியாக்டர்களாக பயன்படுத்தும் போக்கு மெல்ல தொடங்கி வருகிறது. ஏன், இந்தியாவில் கூட இந்த செயல்பாடு 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது? அணுக்கள் பிளவுபடுவதனால்தான். அந்த கான்செப்ட்தான் தோரியம் ரியாக்டர்களிடம் நடைபெற வைக்க முயல்கிறார்கள். இதற்கான முயற்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும், பிரான்சிலும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசு இல்லாத ஆற்றல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதக்கும் சோலார்

சூரிய சக்தியில் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு முறை! - எம்ஐடி சாதனை!

படம்
கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள் என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியது. இதனை எப்படி அனைத்து குடும்பங்களும் பயன்படுத்த முடியும்? அதற்காகத்தான் இந்த கருவி. இதன் மூலம் நூறு டாலர்கள் விலையில் ஒரு குடும்பம் தனக்கு தேவையான குடிநீரைப் பெறலாம். அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி, சீனாவைச் சேர்ந்த ஜியாவோ டாங் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், கடல்நீரை மின்சாரமின்றி எளிதாக குடிநீராக மாற்றலாம். இதனால் குடிநீர் பிரச்னையால் கடல்பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களை தடுக்க முடியும். இதனின் மாதிரியை எம்ஐடி அமைப்பின் மாடியில் வைத்து சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். இக்கருவியில் நீரை சுத்திகரிக்க பல்வேறு அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மாதிரிக்கருவில் பத்து அடுக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அதிகம் பயன்படுத்தினால் காசும் கூடும். கருவியும் பெரிதாகும். மாதிரியில் பயன்படுத்திய ஏரோஜெல் விலைகூடியது. இதனை சந்தைக்கு கொண்டுவரும்போது விலைகுறைவான மாற்று பொருளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் எண்ணியுள்ளனர். சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீரை சுத்த