இடுகைகள்

சட்டவிரோதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

படம்
  ட்ரூத் - சீன  டிவி தொடர்  யூட்யூப்  தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர்.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை.  பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப்படுத்துகிறார்கள் என்பதே முக்

சட்டவிரோத வணிகம் சமூகத்தைக் கடுமையாக பாதிக்கிறது! வூ ஹோவாய் நாம் டங்

  வூ ஹோவாய் நாம் டங் ஆராய்ச்சியாளர்,கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், டென்மார்க் நாம் டங், காண்டாமிருக கொம்புகளை வணிகம் செய்வது பற்றிய வாடிக்கையாளரின் மனநிலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  சட்டவிரோத வணிகம் சமூகத்தை பாதிப்பதாக நினைக்கிறீர்களா? அரசின் சட்டப்பூர்வமான வணிகத்தில் போதுமான கொம்புகள் கிடைக்காதபோது, வாடிக்கையாளர்கள் சட்டவிரோத வணிகர்களை நாடிச்செல்கிறார்கள். இப்படி சட்டவிரோதமாக காண்டாமிருக கொம்புகளை வாங்குவது காட்டின் பல்லுயிர்த்தன்மையை அழிக்கிறது. காடுகளில் கிடைக்கும் சாதாரணமான பொருட்களை குறைந்த வருமானமுள்ள குழுவினர் பெறுகிறார்கள். மிகச்சிலர் மட்டுமே அதிக மதிப்பான பொருட்களைத் தேடுவதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.  எப்படி விலங்குகளிலிருந்து பெறும் பொருட்கள் பற்றிய தகவல்களை சேகரித்தீர்கள்? சட்டவிரோத வியாபாரச் சங்கிலி அமைப்பில் உள்ள வேட்டைக்காரர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரிடமும் பேசியிருக்கிறேன். வியட்நாமில் உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் வயதானவர்களாக, வசதியானவர்களாக இருந்தனர்.  சட்டப்படி விலங்குகளிடமிருந்து பொருட்களை பெற்றுவிற்பது பயன் தருமா? மருத்துவக்

இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

படம்
        பிக்சாபே   கருப்பு உலக ராஜாக்கள் ! இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக , ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன . அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது . பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது . அதேசமயம் , இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும் , மோசடிகளும் நடந்தேறுகின்றன . மார்ச் 11 அன்று , உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது . இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன . இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன . கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின . இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம் , பாகிஸ்தான் 10 ஆயிரம் , இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர் . இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர் . பொருளாதார மந்தநிலை உள்ளபோதும் , ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன அண்மையில் சீன ஹேக்கர்கள் ,

சட்டங்களை காலில் மிதிக்கும் இணைய நிறுவனங்கள்!

படம்
இது சென்னை பற்றிய கட்டுரைதான். இங்குள்ள நிறுவனங்கள் சாலை கான்ட்ராக்டர்களை கையில் போட்டுக்கொண்டு இரவில் சாலைகளைத் தோண்டி இணைய கேபிள்களை புதைத்து குழிகளைக் கூட மூடாமல் சென்றுவிடுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மின்கம்பத்தில் தொங்கிய கேபிள்களைப் பார்க்காமல் பைக்கில் சென்றவர் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனாலும் சென்னை பெருநகர மாநகராட்சி எந்த விதிகளையும் மாற்றாமல் கள்ள மௌனம் காக்கிறது. யாருக்காக என்று இன்று மக்களுக்கும் தெரிகிறது. புகார் அளிப்பது எப்படி? சென்னையில் சாலையில் நீங்கள் குழிதோண்ட வேண்டுமெனில், அதற்கு மாநகராட்சி பொறியாளரிடம் அனுமதிக் கடிதம் பெறவேண்டும். 1913 என்ற எண்ணுக்கு அனுமதி பெறாத இதுபோன்ற செயல்பாடுகளைக் குறித்து புகார் தெரிவிக்கலாம். முறைப்படி நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சி உதவி பொறியாளர், அல்லது அவரின் கீழேயுள்ள பொறியாளர் அந்த இடத்தை வந்து பார்வையிடுவது அவசியம். புகார்களை நம்ம சென்னை அப்ளிகேஷன் வழியாக அளிக்கலாம். இதுகுறித்து அறிவுறுத்தல்கள் சென்னை கார்ப்பரேஷன் வலைத்தளத்தில் உள்ளது. முப்பது நாட்களுக்கு முன்பா

கட்டாய தானம் பெறுகிறார்களா?

படம்
சீனாவில் மரண தண்டனை பெறுபவர்களின் உடலிலிருந்து, உறுப்புகளை பெறுவது சீனாவில் வழக்கமாக உள்ளது. சீன அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கத்தை விட்டொழித்துவிட்டதாக கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து விசாரிக்கும் தன்னார்வ அமைப்பு லண்டனில் செயல்பட்டு வருகிறது. இது சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை என்றாலும், சீனாவில் நடைபெறும் சட்டவிரோதமான உறுப்பு பரிமாற்றங்களை கேள்விக்குக்குள்ளாக்கி வருகிறது. சீன அரசு உய்குர் முஸ்லீம்கள் மற்றும் ஃபால்கன் காங் மதத்தைப் பின்பற்றுவர்களை இந்த உறுப்பு பரிமாற்ற அறுவைசிகிச்சைகளுக்கு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மறுத்தாலும் அரசியல் கைதிகளையும், தூக்கு தண்டனை கைதிகளையும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வந்துள்ளன. இங்கிலாந்திலுள்ள விசாரணை அமைப்பு நீதிபதி இதுகுறித்து, சீன மருத்துவமனைகளில் எப்படி லிஸ்டில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த நாட்களில் மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. இதற்கு அர்த்தம், உறுப்புகளை லிஸ்ட்படி அவற்றை முன்னமே தயாரித்து வைத்து இருந்தால்தான் சாத்தியம் என்கிறார். ஆய்வு செய்த பனிரெ