கட்டாய தானம் பெறுகிறார்களா?





Image result for china organ theft


சீனாவில் மரண தண்டனை பெறுபவர்களின் உடலிலிருந்து, உறுப்புகளை பெறுவது சீனாவில் வழக்கமாக உள்ளது. சீன அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கத்தை விட்டொழித்துவிட்டதாக கூறிவருகிறது.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கும் தன்னார்வ அமைப்பு லண்டனில் செயல்பட்டு வருகிறது. இது சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை என்றாலும், சீனாவில் நடைபெறும் சட்டவிரோதமான உறுப்பு பரிமாற்றங்களை கேள்விக்குக்குள்ளாக்கி வருகிறது.


சீன அரசு உய்குர் முஸ்லீம்கள் மற்றும் ஃபால்கன் காங் மதத்தைப் பின்பற்றுவர்களை இந்த உறுப்பு பரிமாற்ற அறுவைசிகிச்சைகளுக்கு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. அரசு மறுத்தாலும் அரசியல் கைதிகளையும், தூக்கு தண்டனை கைதிகளையும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வந்துள்ளன.

இங்கிலாந்திலுள்ள விசாரணை அமைப்பு நீதிபதி இதுகுறித்து, சீன மருத்துவமனைகளில் எப்படி லிஸ்டில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த நாட்களில் மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. இதற்கு அர்த்தம், உறுப்புகளை லிஸ்ட்படி அவற்றை முன்னமே தயாரித்து வைத்து இருந்தால்தான் சாத்தியம் என்கிறார். ஆய்வு செய்த பனிரெண்டு மருத்துவமனைகளில் ஒன்பது மருத்துவமனைகளில் ஃபால்கன் காங் மத உறுப்பினர்களின் உறுப்புகள் பயன்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும் கூட உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகள் அதிகம் சீனாவில் நடைபெறுகின்றன. முஸ்லீம் மக்களை வைத்திருக்கும் முகாம்களில் அல்ட்ரா ஸ்கேன்களின் மூலம் உறுப்புகளை சோதித்து, வலுக்கட்டாயமாக உறுப்பு மாற்ற சிகிச்சைகளை செய்து வருகின்றனர் என்கிறார் டாக்டர் ஜோசப். இவர் வலுக்கட்டாயமாக உறுப்பு மாற்றும் சிகிச்சைகளுக்கு எதிராக போராடிவருகிறார்.


2015 ஆம் ஆண்டு முதலாக சீன அரசு, கைதிகளிடமிருந்து உறுப்பு மாற்ற சிகிச்சைகளுக்களுக்கு உறுப்பு எடுப்பதை நிறுத்திவிட்டதாக கூறுகிறது. ஆனால், 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணையதள தகவலில் 640 உறுப்பு மாற்ற சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இதில் 30 உறுப்புகள் மட்டுமே தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சீனாவில், முஸ்லீம்கள் கடுமையாக சித்திவதைக்குட்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் உறுப்புகள் கடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார் உலக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்  அமைப்பைச் சேர்ந்த பேட்ரிக் பூன்.

நன்றி: நியூ சயின்டிஸ்ட் - கிளார் வில்சன்