உலகைக் கலக்கும் ரா வாட்டர் மோகம்!
தூயநீர் என்பது என்ன?
மினரல்கள் கலக்கிய தூய்மைபடுத்திய நீர் ஒரு மார்க்கெட் என்றால் அவை ஏதுமில்லாத ரா வாட்டர் என்ற நீர் அமெரிக்காவில் கொள்ளை விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ரா வாட்டருக்கான மோகம் அதிகரித்துவருகிறது. அதுவும் அங்குள்ள டெக் பகுதிகளில் ரா வாட்டர் அதிகம் விற்றுவருகிறது. இயற்கையாக உள்ள கிணறுகள், சுனைகள் ஆகியவற்றை அடையாளம் கண்டறியும் முயற்சி பரவிவருகிறது.
ஒய் ஸ்பிரிங் வாட்டர் எனும் வலைத்தள நிறுவனர், நாங்கள் மினரல்கள் நீரில் கலக்காத இயற்கையான நீரை பருகுவதை ஆதரிக்கிறோம் என்கிறார் டேனியல் விடாலிஸ். அதேசமயம் இயற்கையான நீரைப் பருகுவதில் கவனமாக இருக்கும் தேவை உள்ளது. அதில் ஈகோலி பாக்டீரியாக்கள் கலந்திருக்கும் ஆபத்தும் உள்ளது என்கின்றனர்.
லண்டனைச் சேர்ந்த வால் கர்ட்டிஸ் என்ற சூழல் பாதுகாப்பு அமைப்பாளர், இயற்கையான நீர்நிலைகளை நாடுவது நல்ல விஷயம்தான். ஆனால் கிருமிகளைப் பற்றி கவலைப்படாதது ஆபத்தானது என்கிறார். நாம் கற்காலத்தை நோக்கி போவதாகத் தெரிகிறது. நம் முன்னோர்கள் கூட பாதுகாக்கப்படாத நீரைக் குடித்து டைபாய்டு, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். திரும்ப அதேபோல பாதிப்பு ஏற்படவும் இன்று வாய்ப்புள்ளது என்கிறார் கர்ட்டிஸ்.
இயற்கை நீரை குடிப்பதில் நீர் மட்டுமல்ல, உணவு சார்ந்தவையும் அப்படியே பின்பற்றி வருகின்றன. விட்டாலிஸ் தனது வீடியோவில், நாம் குடிக்கும் சாதாரண நீரில் நல்ல நுண்ணுயிரிகளும், கெட்ட நுண்ணுயிரிகளும் சம அளவில் இருக்கும் என்பது உண்மை. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதனை சமாளித்துக்கொள்ளும் என்றார். அதோடு குழாய் நீரில் ஆன்டி பயாடிக் மருந்துகள் கலப்பு உடலை நலிவடையச்செய்யும் என்கிறார்.
2018 ஆம் ஆண்டு காலன் ஸிங்க், உள்ளூரில் கிடைக்கும் நீரை பருகத்தொடங்கினார். இதில்தான் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் உண்டு. அவையே உடலுக்கு நன்மை பயப்பன என்கிறார்.
நன்றி:பிபிசி