செர்னோபில் செல்லலாமா?




செர்னோபில் அணு உலை கசிவு, அதன் பாதிப்புகள் இன்றையவரைக்கும் உண்டு. மேலும் அங்கு இதற்கான சுற்றுலா திட்டங்களும் நடைபெற்று வருகிறது.


ஆண்டுதோறும் மனிதர் 3 மில்லிவெர்ட்ஸ் கதிர்வீச்சு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர் என்று அமெரிக்கன் கதிர்வீச்சு கல்லூரி அறிக்கை தகவல் சொல்லுகிறது. கதிர்வீச்சின் அளவு 1-20 எம்எஸ்விக்கும் குறைவாக மனிதர்கள் செல்கிறது. 50-200 அளவு என்பது மனிதர்களின் மரபணுக்களைப் பாதிக்கிறது. 200-1000 அளவு மாறும்போது, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும். 2000 எனும் அளவுக்கு கதிர்வீச்சு அதிகரிக்கும்போது கதிர்வீச்சு தொடர்பான நோய்கள் வரும். 10 ஆயிரம் அளவு என வரும்போது இறப்பு நேருகிறது.

செர்னோபில்  அணுஉலையில் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை ஆராய்ந்தபோது, அவர்களின் உடலில் 8 ஆயிரம் - 16 ஆயிரம் கதிர்வீச்சு அளவு இருந்தது. இதன்படி 134 ஆட்கள் கடுமையான கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது.

2018 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பார்வையாளர்கள் உக்ரைனின் செர்னோபில் அணுஉலைக்கு வந்தனர். மேலும், இங்கு வரும் பார்வையாளர்கள் எதையும் தொட, உட்கார, கேமரா பொருட்களைப் பயன்படுத்த தடை உள்ளது. 

நன்றி: லிவ் சயின்ஸ்