விபத்திற்கு வெப்பம்தான் காரணம்!
தமிழ்நாட்டில் கோடைக்காலங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்று ஜாலியாக பலரும் டீ குடித்தபடி பேசியது நிஜமாகி இருக்கிறது.
கடந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 57 ஆயிரத்து 927 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதேசமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை 5,346 .இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1077. கூறியது தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆராய்ச்சித்துறை.
பனிக்காலமான டிசம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 2,163 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 390 பேர் இறந்துள்ளனர். இதற்கு போக்குவரத்துத்துறை என்ன சொல்கிறது?
கோடைக்காலத்தில் மக்கள் பலரும் சுற்றுலா தலங்களுக்குச் செல்கிறார்கள். அதனால் வண்டிகள் சாலைகளில் அதிகம் விபத்துகளில் சிக்குகின்றன என்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் இஷ்டப்படி குறுக்குவழிகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல நடைபாதைகளில் பாதசாரிகளை நடக்கவிடாமல் அதில் பைக்குகளை ஓட்டுவது, அங்குள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவையும் விபத்துகளுக்கு காரணம். மேலும் பலரும் ஹெல்மெட்டுகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதில்லை என அலுத்துக்கொள்கிறார் போக்குவரத்துத்துறை கொள்கைத்துறை அலுவலரான நாஸ்வா நௌஷத்.
கோடைக்கால விபத்துகளுக்கு முக்கியக்காரணம், சிறுவர்கள் வண்டிகளை பழகுவதும் முக்கியக்காரணம். கிடைக்கும் விடுமுறையில் தங்கள் பெற்றோர்களின் வண்டிகளை எடுத்து வேகமாக ஓட்டுகிறார்கள். சாலைத்தடுப்புகளை மோதும் விபத்துகளில் பெரும்பாலானவை இவர்கள் ஏற்படுத்தியதுதான் என்கிறார் வழக்குரைஞரான விஎஸ் சுரேஷ்குமார்.
நன்றி - டைம்ஸ் - சிந்து கண்ணன்.