விவசாயம்தான் எல்லாமே... மகர்ஷி சொல்லும் பிளாக்பஸ்டர் உண்மை!
மகர்ஷி
வம்சி படிப்பள்ளி
கே.யு . மோகனன்
டிஎஸ்பி
அமெரிக்கவாசி இந்தியர், தன் நண்பரைக் காண வந்து கிராமத்தின் பிரச்னையைத் தீர்ப்பதுதான் ஒன்லைன் கதை.
ஆஹா..
வேறுயார் மகேஷ்பாபுதான். விவசாயம் சார்ந்த கதையை தோளில் அயராமல் தூக்கிச்சென்று நம் மனதில் உட்கார வைக்கிறாரே.. அதற்கே கைதட்டலாம். காலேஜ் போர்ஷன்கள், சற்று நெளிய வைத்தாலும் பின்பகுதியில் அசர வைத்துவிடுகிறார்.
அத்தனை சூழலுக்கும் ஈடுகொடுக்கும் மனவாடு தேச இசைஞர் டிஎஸ்பி இதிலும் பின்னி எடுத்திருக்கிறார். இதே கதா பாடல் நெஞ்சை நெகிழ வைத்து கண்களை நிறைய வைக்கிறது.
பாடலில் குதூகலமாகவும், சண்டையில் நெருப்பாகவும், உணர்ச்சிக காட்சியில் ஏறத்தாழ நாம் பார்க்கும் கண்களாகவே மாறியிருக்கிறது கேமரா.
அடச்சே...
பூஜா ஹெக்டேதான். சர்க்கரைப் பொங்கலுக்கு வடகறியாக இருக்கும கதாபாத்திரம் இது. படத்தில் கமர்சியலுக்கு குத்தாட்டம் போட்டு உதவியது, நாயகனை திட்டுவது தாண்டி வேறு எதுவும் செய்யவில்லை.
ஜெகதிபாபு எனும் திறமையான கலைஞரை, நாசரை வீணடித்திருக்கிறார்கள்.
கிளாப்ஸ்
நோக்கம் அடிப்படையில் வெற்றிதான். விவசாயத்திற்கான பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் பலரும் அதனை கைவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அதுதான் இந்தியாவின் அடிப்படை என்று மகேஷ்பாபு மூலம் சொல்லியிருப்பது அட்டகாசம்.
அமெரிக்கா, அண்டார்டிகா எங்கு சென்றாலும், சம்பாதித்துவிட்டு நம் மக்களோடு சேர்ந்து மண்ணுக்கான விஷயங்களை செய்யலாம் என்று சொன்ன நோக்கம் பிரமாதம். படத்தின் வெற்றியும் அதைத்தான் ரசிகர்களும் ஆமோதித்து இருக்கிறார்கள்.
- கோமாளிமேடை டீம்