ஸ்ட்ரிப் மால்கள் அதிகரிக்கும் காரணம் என்ன?
தகவல் துளிகள்
ஸ்ட்ரிப் மால்
காய்கறிகள், சலூன், துணிக்கடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மால்களை ஸ்ட்ரிப் மால் என்று கூறலாம். திறந்தவெளியில் அமைந்த சந்தை எனவும் பொருள் கொள்ளலாம். இம்மால்களின் முன்னே கார் பார்க்கிங் இருக்கும். காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றால், நடைபாதையில் இருபுறமும் கடைகள் இருக்கும். அதுதான் இதன் டிசைன்.
இன்று உலகளவில் இந்த வகையிலான சந்தைகள் நிறைய உருவாகிவிட்டன. காரணம், உயர்ந்துவிட்ட மக்களின் தனிநபர் வருமானம்தான்.
ஐரோப்பாவில் ரீடெய்ல் பார்க்குகள் என்றே மால்களைச் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஸ்ட்ரிப் மால்களை பவர் சென்டர் என்று குறிப்பிடுகின்றனர். உள்அரங்குகளைக் கொண்ட மால்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைய, திறந்தவெளி மால்கள் மெல்ல மக்களிடையே புகழ்பெறத் தொடங்கியுள்ளன.
இப்போது அது குறித்த டேட்டாவைப் பார்க்கலாம்.
1.அமெரிக்காவில் ஸ்ட்ரிப் மால்களின் எண்ணிக்கை 31 சதவீதம் உள்ளது. 1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு 250 மால்கள் கலிஃபோர்னியாவில் உருவாகியுள்ளன.
2.அமெரிக்காவில் தற்போது 68 ஆயிரம் ஸ்ட்ரிப் மால்கள் இயங்கி வருகின்றன. லாஸ் ஏஞ்சல்சில் 650 ஸ்ட்ரிப் மால்கள் தொண்ணூறுகளில் இருந்து இயங்கி வருகின்றன. லா மன்ச்சா என்ற நிறுவனமே இங்குள்ள ஸ்ட்ரிப் மால்களை மேம்படுத்தி வருகிறது.
3. 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர அடிகள் வரை ஸ்ட்ரிப் மால்கள் உள்ளன.
4. ஒரே மாதத்தில் ஐந்து ஸ்ட்ரிப் மால்களை லா மன்ச்சா நிறுவனம் கட்டியதே சாதனையாக உள்ளது.
அமெரிக்காவில் நெடுஞ்சாலைகள் அதிகரிக்கப்பட்டதும், கார்கள், குறுநகரங்கள் உருவானதும் ஸ்ட்ரிப் மால்கள் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம்.
1954 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட வரிச்சீர்திருத்தம், நிலங்களை குறைவான விலைக்கு மாற்றின. இதனை வாங்கிப்போட்டவர்கள் அதில் ஸ்ட்ரிப் மால்களைக் கட்டினர்.
நன்றி: க்வார்ட்ஸ்