ஐட்யூனை மூடும் ஆப்பிள்!



Apple store at Grand Central Station in New York.


ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐட்யூன், டவுன்லோடு சேவைகளை மூடவிருக்கிறது. என்ன காரணம்? இசை, பாட்காஸ்ட் உள்ளிட்ட சேவைகளுக்கென தனி ஆப்களை உருவாக்கி வருவதால் இந்த அதிரடி முடிவு.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று ஐட்யூன் சேவை தொடங்கப்பட்டது. ஆப்பிளின் கிரியேட்டிவிட்டி இயக்குநரான ஸ்டீவ் ஜாப்ஸ், சிடி, டிவிடிகளிலிருந்த பாடல்களை இணையத்திற்கு கொண்டு வந்தார். ஐட்யூன் தளத்தில் வடிவமைப்பு அப்போது கோப்புகளை பரிமாற்றம் செய்து வந்த நாப்ஸ்டர் எனும் தளத்தை ஒத்திருந்தது.

ஆனால் ஐட்யூனின் வெற்றி மிக குறைவான நாட்களே இருந்தது. காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பாட்டிஃபை போன்ற இலவச, கட்டண சேவை நிறுவனங்கள் இசையை ஜனரங்க மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன.

2020 ஆம் ஆண்டு வரை ஐட்யூன் வலைத்தளம் இணைய உலகில் நிற்பது கடினம் என கணித்துள்ளனர் டெக் வல்லுநர்கள்.

நன்றி: தி கார்டியன்