ரயில்வே உள்வாடகைக்கு விடப்படும்!




Image result for rail


அரசு தற்போது பராமரித்து நஷ்டத்துடன் நடத்தி வரும் ரயில்வே துறை விரைவில் தனியார்களுக்கு வாடகைக்கு விடப்படவிருக்கிறது. இதற்கான ஏலம் நடைபெறவிருக்கிறது. தற்போது முதல்கட்டமாக குறிப்பிட்ட சுற்றுலா தல ரூட்டுகள் மட்டும் ஏலம் விடப்படவிருக்கின்றன.

ஐஆர்டிசியில் வழங்கப்படும் டிக்கெட்டுகளின் கட்டணங்களும் இனி மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. தனியார்களின் கையில் ரயிலின் இயக்கம் செல்லும்போது, அரசு விதிக்கும் கட்டணம் மாற்றப்படும் என்பதை சொல்லவேண்டியதில்லை.

இதில் சாதுரியமாக மானியத்துடன், மானியம் இல்லாமல் என இருமுறைகளில் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.


அடிப்படை வசதிகளை செய்து தராமல், வேறு தனியார் நிறுவனங்கள் இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என்று எண்ணத்தை உருவாக்குவது அரசின் தந்திரம். இதனை அரசு போக்குவரத்து, அரசு சேவைகள் அனைத்திலும் பார்க்கலாம். இனி சென்னை - கோவை ரூட் ஒரு நிறுவனம், ஹைதராபாத் - சென்னை என பல்வேறு ரூட்டுகளை தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் ஜெயித்து நடத்த முன்வரலாம்.

இதன் விளைவாக டிக்கெட் விலை, பேருந்து விலையைப் போலவே மாறுவதோடு நிறுத்தங்களில் நிறுத்தும் விஷயங்களும் மாறுபடலாம். அரசு, இதனை கவனித்து வரும் ஒழுங்காணையமாக மட்டுமே இனி செயல்படும்.


தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டு முழுமையாக நொறுக்கப்பட்ட நிரந்தரப் பணியாளர்களால் ஏற்படும் இழப்பு குறைக்கப்பட்டு, தினசரி பணியாளர்கள் அதிகம் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுவே ஓய்வூதியம் உள்ளிட்ட விஷயங்களை தருவதிலிருந்து அரசை விலக்கும்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா