குடிக்கும்போது ஆவேசப்படுவது ஏன்?
மிஸ்டர் ரோனியின்
ஏன்?எதற்கு?எப்படி?
சிலர் மது அருந்தியதும் ஆவேசப்படுகிறார்களே ஏன்?
மது அருந்தியவுடன் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. சிலருக்கு அது சாக்கு. சில விஷயங்களை அதைச் சாக்காக வைத்து சொல்லலாம். இது உளவியல். அறிவியல்படி என்ன சொல்ல லாம்? மூளையின் முன்முகுளப் பகுதியில் சுய கட்டுப்பாட்டு, முடிவெடுக்கும் பகுதி ஆகியவற்றை மது பாதிக்கிறது. இப்பகுதி மழுங்கும்போதுதான், இதுவரை பார்த்திராத ஜேப்படித் திருடர்களோடு ஜோக் அடித்து சிரிப்பதும், அவர்களோடு சேர்ந்து வண்டியில் வேகமாக செல்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது.
சாதாரணமாக பார்க்கும்போது சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமல் அமைதியாக இருப்பவரும், குடிக்கும்போது டி.ஆர் மாதிரி ஆகிவிடுகிறார்.
நன்றி பிபிசி