டைகர் ஜாக்கின் வீரதீர வாழ்க்கை- வில்லர் -டைகர் நட்பின் கதை!




Image result for tex viler and tiger jack
Image result for tex viler and tiger jack

டெக்ஸ் வில்லர்- டைகர் ஜாக் கலக்கும்

காதலும் கடந்து போகும்
முத்து காமிக்ஸ்
விலை ரூ.200


Image result for tex viler and tiger jack


டெக்ஸ் வில்லரின் நண்பர்களில் ஒருவரான டைகர் ஜாக்கின் கதை. செவ்விந்தியரான டைகர் ஜாக்கின் சோகமான வாழ்க்கையைச் சொல்லும் கதை இது. 

அபாரமான உடல் பலமும், விவேகமும் கொண்ட டைகர்ஜாக், தானியா என்ற சக இன பெண்ணை விரும்புகிறார். ஆனால் அவளது திருமணத்தின்போது நடைபெறும் ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது. இதன் விளைவாக நடைபெறும் ஆக்சன் அத்தியாயங்கள்தான் கதை.

இங்குதான் இரவுக்கழுகார் வில்லரையும் டைகர்ஜாக் சந்திக்கிறார். இருவருமாக ஒரே லட்சியத்திற்கு உழைத்து எதிரிகளை ஒழித்துக்கட்டுவதுதான் கதை.


காதல், திருமணம், பிரிவு, துயரம், வாழ்க்கை என பல கேள்விகளுக்கு பதில் சொல்லும்விதமாக காமிக்ஸ் கதை சும்மா பறக்கிறது.

டைகர் ஜாக்குக்கும், பெண் கடத்தல் குழுக்களுக்கும் நடக்கும் சண்டைகள் உங்கள் புஜத்தை முறுக்கேற்றுகின்றன. அடிக்கும் அடியில் நமக்கு கடைவாய், எலும்புகள் எல்லாம் நொறுங்குவது போல தோன்றுகிறது. டைகர் ஜாக்கின் பாய்ச்சலான வேகம், அடிக்கும் அடி என மாஸ் நாயகனாகவே இந்த நூலில் களம் காண்கிறார்.

இருபத்தைந்து பேரை கொத்துப்பரோட்டோ போட்டு பிணந்தின்னி கழுகுகளுக்கு விருந்தாக்கும் காட்சி டெக்ஸ் வில்லரையே மிரட்டுகிறது. முக்கியமாக டெக்ஸ் வில்லரை ஒரே வீச்சில் அறைந்து வீழ்த்தும் விரக்தி வேகம் அட்டகாசம்.

துயரத்திலிருந்து தன்னை மீட்க அவர் செய்யும் பயிற்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன. வாழ்க்கை மீது நம்பிக்கை பெற்று டெக்ஸ் வில்லரோடு இணையும்போது காமிக்ஸ் முடிந்து போகிறது.

கதையை கேட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர். ஆனால் அப்படியே நின்றுவிடமுடியாது அல்லவா? நாமும் கண்களைத் துடைத்துக்கொண்டு டெக்ஸ் வில்லரின் குதிரைகளை பின்தொடரத்தானே வேண்டும்?

வாழ்க்கைக்கான தரிசனமாக டெக்ஸ் வில்லரையும் டைகர் ஜாக்கினை கதைகளையும் எழுதியிருக்கிறார்கள். படிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். வார்த்தை விளையாட்டுகளை விட சண்டைகள்,துப்பாக்கிகளின் உறுமல் இதில் அதிகம்.

- கோமாளிமேடை

நன்றி: ரெ.கார்த்திகேயன்









பிரபலமான இடுகைகள்