மேக் கணினிக்கு வயது 30!
1987-90 களில் டெக் வட்டாரங்களில் ஒரே பேச்சு. மேக் குறித்துத்தான். அப்போது மேக்கின்டோஷ் என்று கூறுவார்கள். ஒன்பது அங்குல சைசில் அன்று இந்த கணினி டைனோசர் போலத்தான் இருந்தது. மேக்கின்டோஷ் எஸ்இ எனும் இந்த கணினி 20 மெகாபைட் ஹார்ட் டிஸ்க்கை கொண்டிருந்த து. விலை 3,900 டாலர்கள்.
அன்று ஆச்சரியமாக இருந்த மாக்கின்டோஷ் கணினி, இன்று அனைத்து முக்கிய கலைஞர்களும் தங்களுக்கென வாங்கும் வகையில் ஜனரஞ்சமாகிவிட்டது. ஆனால் விண்டோஸ் அளவுக்கு கிடையாது. இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் கூட கணினியை வீட்டில் வாங்கியபின்னரே பள்ளிக்குச் செல்கிறார்கள்.
ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு, கணினியில் ஃபேன் ஓடாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான். மேலும் இதனை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்வதும் எளிமையாக இருக்கவேண்டும் என அவர் நினைத்தார். இதனை ஆப்பிள் 2 சாதித்தது.