அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

Image result for cyberchondria




மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது.

அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர்.

205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது.

24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர்.

இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர்.

இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 11.7%, 20 சதவீதம் பேர் தாங்கள் இணையத்தில் படித்ததை மருத்துவரிடம் சொல்லி அதன் உண்மையை சோதிப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம்.

இதில் 6.8 சதவீதம் பேர் தங்கள் மருத்துவர்களின் சோதனை முறைகளை நம்புவதிலை. 19 சதவீதம் பேர் இணையத்தின் முடிவுகளைக் கண்டு பயப்படுவதில்லை. 8.8% பேர் தூங்கும்போதும் கூட இணையத்தின் ஆராய்ச்சி முடிவுகளை நினைத்துக்கொண்டே உள்ளனர்.

இந்த சைபர் காண்ட்ரியா மனநல பிரச்னையை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. சமூக வலைத்தள ஊடகங்களில்தான் இவை பெரிதளவு உருவாகிறது. நாங்கள் இணையத்தில் படிக்கும் அத்தனையும் நம்பாதீர்கள் என முடிந்தவரை கூறி வருகிறோம் என்கிறார்கள் மருத்துவர்கள் வி கோபிச்சந்திரன் மற்றும் மது தொட்டப்பள்ளி.

நன்றி: டைம்ஸ்





பிரபலமான இடுகைகள்