உருகும் ஆர்க்டிக் வெளியாகும் நச்சு!






ஆர்க்டிக் பகுதி, வெப்பமயமாதலால் உருகிவருவதை டிவியிலும் நாளிதழ்களிலும் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, அணுக்கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றிலிருந்து நச்சுகள் வெளியாகி நீர்ப்பரப்பில் கலக்கத் தொடங்கியுள்ளன.

2100 ஆம் ஆண்டுக்குள் கரிம எரிபொருட்கள் விளைவாக ஆர்க்டிக் பகுதி பனிக்கட்டிகள் முழுவதும் கரையும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளும் மாறி நிகழும் வாய்ப்புள்ளது. மேலும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில்தான் உள்ளது.

உலகளாவிய ஆராய்ச்சிக்குழுக்கள் பனி உருகி வரும் வேகத்தை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் வெளியாகும் கார்பன் அளவை கணித்து அதனைக் குறைக்க முடியும் என்கிறார் ஆராய்ச்சியாளர் வுட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் சூ நடாலி கூறியுள்ளார்.

நன்றி: ஃப்யூச்சரிசம்