குரல் மூலம் முகம் வரையும் ஏஐ!



உண்மைதான். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் வேகமும் இன்று அதிகமாகிவிட்டது. தற்போது ஒருவரின் குரலைக் கேட்டு யூகமாக அவரின் முகத்தை ஏஐ வரையத் தொடங்கியுள்ளது.


நம் கண்களைப் பொத்தியபடி ஒருவர் வந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்கிறார் எனில், டக்கென் மூளை தன் நினைவடுக்கில் தேடி ஹாய் குமார் என சொல்கிறோமே அதேதான். ஆனால் அதனை செயற்கை நுண்ணறிவு பழகிவிட்டது என்பதே ஆச்சரியம்தானே. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஆடியோ கிளிப்புகளை வைத்து பயிற்சி கொடுத்து இதனை சாதித்திருக்கிறார்கள்.


ஸ்பீச் டு ஃபேஸ் எனும் வசதி தோராயமானதுதான். குரலை வைத்து ஆணா பெண்ணா என கணித்து தோராய அளவில் உருவத்தை வரைகிறது. செயற்கை நுண்ணறிவின் வசதியில் இது முக்கியமானது கூட. arxiv எனும் அறிவியல் இதழில் இந்த ஆராய்ச்சி குறித்து செய்தி வெளியாகியுள்ளது. எந்தளவு உண்மையான முகத்தோடு மேட்ச் ஆகிறது என நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி: லிவ் சயின்ஸ்