அதிர்ச்சி ஏற்பட்டால் உடல் நடுங்குகிறதா?
பயம் ஏற்படும்போது உடல் நடுங்குவது ஏன்?
பொதுவாக உருட்டுக்கட்டை போன்ற நாயைப் பார்க்கும்போது, எக்ஸ்எல் சைஸ் ஆன்டியைப் பார்க்கும்போது, ஆண்டு இறுதியில் இன்கிரிமெண்டாக போடும் ஆயிரம் ரூபாயைப் பார்க்கும்போது உடல் நடுங்கும், நாக்கு குழறும்.
காரணம், மூளையிலுள்ள அமிக்தலா எனும் பகுதியில் மேற்சொன்ன அசம்பாவிதங்கள், ஆச்சரியங்கள் நடக்கும்போது, அட்ரினலின் சுரக்கத் தொடங்கும். பயம், சண்டை இரண்டுக்குமான டபுள் டூட்டி ஹார்மோன் இதுவே. சூழலைப் பொறுத்து ஆச்சரியப்படவோ, ஆவேசப்படவோ காரணம் இந்த சுரப்பிதான்.
அட்ரினலின் அளவு அதிகரிக்கும் போது உடலின் தசைகளால் நடுக்கமுறுவதைத் தடுக்க முடியாது. மெல்ல இதயத்துடிப்பை அமைதியாக்க நான்கைந்து முறை மூச்சை இழுத்து விட்டால் எதிர்பார்ப்பு, அதிர்ச்சி குறைந்து உடல் நார்மல் மோடுக்கு வரும்.
தகவல், படம்: பிபிசி