1984 ஜார்ஜ்வெல் நூலுக்கு எழுபது வயது!





1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல். எரிக் பிளேர் என்பவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற பெயரில் இந்த நூலினை எழுதினார். இதில் வரும் ஸ்மித் என்பவர் அரசு அதிகாரி. நாளிதழ்களில் வரும் செய்திகளை கவனமான தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக மாற்றி எழுதி மக்களுக்கு பிரசாரம் செய்வதே பணி.

இதில் டெலிஸ்க்ரீன் என்ற கருவி வரும். ஏறத்தாழ டிவி போல. ஆனால் இதனை நீங்கள் அணைக்க முடியாது. அதன் வழியாக நீங்கள் கவனிக்கப்பட்டு வருவீர்கள். இரண்டாம் உலகப்போரின் போது டிவி இருந்தாலும், அதனை அறிவியல் புனைவில் பயன்படுத்திய ஆர்வெல்,  முன்னதாகவே இதனை எழுதிவிட்டார். அப்போது ஜெர்மனியில் வீடியோ போன் சிஸ்டம்தான் உருவாக்கப்பட்டிருந்தது.


நூல் எழுதிய காலகட்டத்தில் டிவி பார்க்கும் மோகம் அபரிமிதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கூட அதிகம்தான். 2017 வாக்கில் மெல்ல டிவி செல்வாக்கிழந்து வருகிறது. இப்போது, டிவியின் இடத்தை இணையம், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை பிடித்து விட்டன. ஆனால் நூலில் வரும் அரசின் கண்காணிப்பு வேறுவகையாக மாறிவிட்டது.

அமெரிக்கா, விசா கொடுப்பதற்கு முன்னே பயணிகளின் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்த பின்னரே நாட்டில் அனுமதிக்கும் முடிவை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது. டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பிரதர், பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகள் மக்களின் உளவியலை மாற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

பிறரின் அந்தரங்க வாழ்வை வாயேரிசமாக சமூகமே பார்ப்பது போன்ற சித்திரத்தை இத்தகைய நிகழ்ச்சிகள் உருவாக்குகின்றன. 1984 நூல் சொல்லுவதும் இதுபோன்ற சித்திரம்தான். இவைதவிர சீனா போன்ற தேசியவாத அரசுகள், கண்காணிப்புக்காக பொருத்தும் சிசிடிவியும் மோசமான முன்னுதாரணங்கள்தான்.


நன்றி: தி கான்வர்சேஷன்









பிரபலமான இடுகைகள்