நீர்நிலைகளை தூர்வாரி விழிப்புணர்வு செய்யும் இளைஞர்!
குளங்களை மீட்கும் இளைஞர்
சென்னையைச் சேர்ந்த என்விரோன்மென்டல் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, இதுவரை 39 ஏரிகள் 48 குளங்களை தன்னார்வலர்களுடன் சேர்ந்து தூய்மைப்படுத்தியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு என்விரோன்மென்டல் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் பணியாளரான அருண் கிருஷ்ணமூர்த்தி, இயற்கைச்சூழல் வட்டாரத்தில் பணியாற்றிவந்தார்.
குஜராத், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு குளங்கள், குட்டைகளை தூர்வாரியுள்ளார்.
அறிவியல் முறையில் நீர்நிலைகளைத் தூர்வாரினால் மட்டுமே நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும். எதிர்வரும் காலத்தில் இப்போது சந்திக்கும் நீர் பற்றாக்குறையை இன்னும் தீவிரமாக சந்திக்க வேண்டி வரும் என்கிறார் அருண்.
யூடியூபில் ஹைட்ரோஸ்தான் எனும் வீடியோ சேனலை நடத்தி வருகிறார் அருண். நாங்கள் பல்வேறு அரசுகளுடன் இணைந்து திட்டங்களை நடத்தி வருகிறோம். நாங்கள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் அனுமதியுடனும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறோம் என்கிறார் அருண்.
நன்றி: யுவர்ஸ்டோரி.காம்