ரஷ்யாவை முடக்கும் ஊடக சர்வாதிகாரி!




investigations/GromovSr.jpg


ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரி!



2017 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் ரஷ்யாவில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா?


நூறுபேர்களுக்கு மேல் ஊழலுக்கு எதிராக மாஸ்கோ வீதிகளில் போராடத் தொடங்க, அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. உடனே அரசுப்படைகள் மக்களை அடித்து விரட்டத் தொடங்கினர். 2 ஆயிரம் மக்களுக்கு மேல் போராடிய இந்த போராட்டங்களை வாய்ப்பு கிடைத்த தென மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ய அலைபாய்ந்தனர். ரஷ்ய ஊடகங்களும் இதனை செய்தியாக்கினர். ஆனால் மக்களுக்கு இந்த செய்தி மி க குறைவாகவே கிடைத்தது. மார்ச் 26 தொடங்கிய போராட்டம் அப்படியே வலிமை குன்றிப் போனது.

ஊடகங்களை அடித்து மிரட்டி கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர், அலெக்ஸி கிரமோவ். புதினின் அரசைக் கட்டுப்படுத்திக் காப்பாற்றுவதில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளவர் அலெக்ஸி.  வேறுமாதிரி சொல்வது என்றால் புதின் சொல்லும் சரி, தவறு விஷயங்களை ஊடகங்களுக்கு வழங்குவது இவர்தான். முக்கியமான சமாச்சாரம், ரஷ்யா டுடே டிவியின் இணை நிறுவனர் வேறு யாருமில்லை, அலெக்ஸிதான்.

70 களில் மாஸ்கோ மாநில பல்கலையில் வரலாறு படித்தவர். கால்பந்து மீது பெரும் மோகம் கொண்டவர். ஆனாலும் இவர் குறித்த செய்திகள் எங்குமே வராது. அப்படி பார்த்துக்கொண்டாரா என்று தெரியாது. அலெக்ஸி நட்புறவு கொண்ட ஆளுமை என்று அவரது நண்பர்கள் தகவல் சொல்லுகின்றனர்.

சோவியத் மாணவர்கள் விவசாயம் செய்வது கட்டாயமான பயிற்சி. உருளைக்கிழங்கு பறிக்கும்போது, அங்கு கூடவே பணிசெய்த அன்னாவை காதலித்து மணந்தார். பின்னர், அரசுப்பணியில் இணைந்து செக்கோஸ்லோவியாவில் பணிபுரிந்தார். சோவியத் யூனியன் உடையும்போது, ரஷ்ய தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார் அலெக்ஸி. 1996 ஆம் ஆண்டு இவரது பாஸ், போரிஸ் யெல்ஷ்டினின் ஊடகத்துறை செயலாளர் ஆனார். அலெக்ஸி தன் பாஸைப் பின்பற்றி, மாஸ்கோ சென்று அதிபர் போரிஸின் தலைமை ஊடக அதிகாரி ஆனார்.

பின்னர், 2000 தில் புதின் அதிபராக, ஊடக்கத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் அலெக்ஸிதான். ஊடகத்துறை அதிகாரி என்பதைத் தாண்டி பாதுகாப்புத்துறை அதிகாரியாகவே மாறிவிட்டார். அரசியல் கருத்துகளில் தனது கருத்தை எப்போதும் அலெக்ஸி கூறியதில்லை. கடும் அழுத்தமான ஆள் என்று குறிப்பிடுகிறார் ரஷ்ய பத்திரிகையாளரான எலினா ட்ருகுபோவா. இவர் 2003 ஆம் ஆண்டு எழுதிய டேல்ஸ் ஆஃப் மாஸ்கோ டிக்கர் எனும் நூலில், புதின் எப்படி சோவியத் காலகட்டத்தைப் போல ரஷ்யாவை மாற்றத் துடிக்கிறார் என்பதை விளக்கியுள்ளார்.

ச.அன்பரசு
நன்றி: occrp.org










பிரபலமான இடுகைகள்