இடுகைகள்

ஜீரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்தி சொன்ன ராஜ்வீர் மீனா!

படம்
  பை எனும் எண்ணின் மதிப்பை வேலூரைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, 70 ஆயிரம் எண்களை நினைவுபடுத்திச் சொல்லி கின்னஸ் சாதனை செய்தார்.  2015 ஆம் ஆண்டு மார்ச்  21 அன்று இச்சாதனையை இவர் செய்தார். இவருக்கு முன்பாக, சாவோ லூ என்ற சீனர் 67,780 எண்களை மனப்பாடாக கூறியதே சாதனையாக இருந்தது.  2005 ஆம் ஆண்டு அகிரா ஹராகுசி என்பவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் 1,17,000 பை எண்களை மனப்பாடம் செய்து கூறினார் என்கிறது தி கார்டியன் பத்திரிகை.  இப்படி எண்களை நினைவுபடுத்தி கூறுவதை கணிதத்தில் பைபிலாலஜி (piphilology) என்று குறிப்பிடுகின்றனர்.  பை என்ற எண்ணுக்கான மொழியை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு பிலிஸ் (Pilish ) என்று பெயர். 2010 ஆம் ஆண்டு மைக் கீத் என்பவர் இது பற்றி நாட் எ வேக் என்ற நூலை இம்மொழியில் எழுதினார்.  2 ஒரு அறையில் 23 பேர் இருந்தால் அவர்களில் இருவர் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு எவ்வளவு தெரியுமா? 50 சதவீதம்.  ஜீரோ மட்டுமே ரோமானியர்களின் எண்களில் இல்லாத ஒரே எண். இது இரட்டைப்படை எண் கூட.  உலகில் 3 ஆயிரம் பேரிடம் செய்த ஆய்வில் பலரின் விருப்ப எண்ணாக இருப்பது ஏழு என்ற எண்தான். அடுத்ததாக,

சூப்பர் ஜீரோ ஹீரோவான கதை!

படம்
studioflicks ஜீரோ ஆனந்த் எல் ராய் மனு ஆனந்த் அஜய் - அதுல் தனிஷ்க் பக்ஷி Steemit சூப்பர் ஜீரோவாக இருப்பவர் எப்படி பலருக்கும் இன்ஸ்பிரேஷன் மனிதராக மாறுகிறார், சூழல்கள் எப்படி அவரை மாற்றுகின்றன என்பதுதான் ஜீரோவின் கதை. மீரட்டில் வாழும்  ஜெகஜால குள்ள மனிதர். தன் அப்பாவின் தவறினால் மரபணு பிரச்னை ஏற்பட்டுவிட்டது என புகார் சொல்லி அப்பாவிடம் அடிவாங்குவதில் தொடங்குகிறது ஷாருக்கானின் நடிப்பு. சூப்பர் ஸ்டார் அண்டர்வேரோடு தெருவில் ஓடுவதை நினைத்துப் பாருங்கள். அசரவேயில்லை. அப்படியே ஷாருக்கான் செய்கிறார். அவருக்கு உயரம் கூட பிரச்னையில்லை. தனக்கு காதலி தேவை, குறிப்பாக மனைவி என தேடுதலில் இருக்கும்போது வானியலாளர் ஆஃபியா பிந்தரை சந்திக்கிறார். செரிபெரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை நடனம், இயல்பான பேச்சு என பேசி படுக்கை வரை வந்துவிடுகிறார். ஆனால் அப்போது பபிதா குமாரி மீதான காதல் தலைதூக்க, கல்யாணத்தைக் கூட தூக்கிப்போட்டுவிட்டு  பபிதாகுமாரியிடம் வந்துவிடுகிறார். அவர், தன் காதலனை இழந்த கோபதாபத்தில் இருக்கிறார். இருவரும் உண்மையான அன்பு என்றால் என்ன என விவாதம் நடத்துகின்றனர்.