இடுகைகள்

தேர்தல் 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செங்கொடியை பறக்க விட்ட பினராயி விஜயன்! - எதிர்ப்புகளை முறியடித்து மக்கள் நலன் காத்த தலைவர்

படம்
      பினராயி விஜயன்/விகடன்       பினராயி விஜயன் - மகத்தான தலைவன் கேரளத்தில் இடதுசாரி முன்னணி அரசு முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று 140 சீட்டுகளில் 100 சீட்டுகளை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது . இத்தனைக்கும் 75 வயதான விஜயனின் மீது தங்க கடத்தல் வழக்கு , சபரிமலை பிரச்னை என பல்வேறு வழக்குகளை பாஜக கட்சி தொடுத்தது . மத்திய விசாரணை அமைப்புகளின் மூலம் ஆளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்தது . இதனை முதலில் அமைதியாக பார்த்த விஜயன் , தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்புகளை மாநிலத்தில் நுழைவதற்கு தடை விதித்தார் . இதனை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களும் பின்பற்றின . இடதுசாரிகள் சிறப்பாக வென்றதோடு , பாஜக கட்சி வெல்லுவதற்கான வாய்ப்பையும் தடுத்துள்ளனர் . 2016 தேர்தலை விட எட்டு சீட்டுகளை மக்கள் கொடுத்துள்ளனர் என்பதோடு , 2024 இல் மக்களவைத் தேர்தலிலும் கூட பாஜகவிற்கு எதிரான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது . இதில் ம ம்தா , ஸ்டாலின் , பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கலாம் . நிபா நோய்த்தொற்று , வெள்ளப்பிரச்சினை , கொரோனாவை சமாளித்தது

தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

படம்
                      அதிமுகவும் , திமுகவும் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார் . இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார் . ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது . எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார் . அவர் 1987 இல் இறந்துபோனார் . அதற்குப்பிறகுதான் 1989 இல் திமுக வெற்றி பெறமுடிந்தது . 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது . ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான் . கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும் . தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது . ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது . தவிக்கும் மதவாத சக்திகள் பாஜக கட்சி உள்ளே நுழைய முடியாமல் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நா

அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசப் பொருட்களுக்கும், சமூகநலத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளதா?

படம்
            இலவசங்களும் மாநிலத்தின் பொருளாதாரமும் ! பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலத்தில் எடுப்பது தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் நடைமுறையாக நடக்கிறது . யார் பதவிக்கு அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களே தலைவர்களாகிவிடுவார்கள் . இந்த வகையில் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை பகிரங்கமாக விற்கப்படுகிறது என்பதை நான் தனியாக சொல்லித் தெரியவேண்டியதில்லை . தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தவிப்பு சூரியக்கட்சிக்கும் , அதைவிட அதிகமாக இலைக்கட்சிக்கும் உள்ளது . இதன் விளைவாகவே தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது . இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிதியுதவி திட்டங்கள் நலத்திட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி அன்பளிப்புகளாகவே மாறிவிட்டன . பெண்களையும் மாணவிகளையும் குறிவைத்து வழங்கும் பல்வேறு இலவச பொருட்களை இப்படி கூறலாம் . நடப்பு ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி தமிழ்நாட்டின் கடன்தொகை 4.85 லட்சம் கோடியாக உள்ளது . அடிப்படைத் திட்டங்களுக்கும் , சுகாதாரங்களுக்கும் நிதியுதவி ஒதுக்ககி செலவிடவேண்டிய நேரத்தில் வீட்டு பயன்பாட்டு பொருட்களை தருகிறோம் . கேஸ் சிலிண்டர்களை கூடுதலாக விலையின்றி

இந்த தேர்தலில் நாங்கள் வெல்ல விரும்புகிறோம்! - கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

படம்
                  கமல்ஹாசன் மக்கள்நீதிமய்யம் தலைவர் நீங்கள் கடந்த மக்களவை தேர்தலில் 3.7 சதவீதம் வாக்குகளைப் பெற்றீர்கள் . இப்போது எந்தளவு வாகுகளைப் பெறுவீர்கள் என்று ஏதேனும் திட்டமிடல் உள்ளதா ? நான் எந்த ஆய்வுகளையும் நம்புவதில்லை . மக்களை மட்டுமே நம்புகிறேன் . மக்களுக்கு எங்கள் மீது ஆர்வம் உள்ளது . அதை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் . 2019 ஆம் ஆண்டிலிருந்து என்ன விஷயங்கள் கற்றுக்கொண்டீர்கள் ? அந்த ஆண்டில்தான் அரசியல்வாதியாக நாங்கள் களம் கண்டோம் . நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்துகொண்டிருக்கிறோம் . நாங்கள் மூன்றிலக்க எண்ணிக்கையை மனதில் கொண்டிருக்கிறோம் . நாங்கள் பத்து சதவீத த்தை கடக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொன்னால் அதுவே எங்கள் வெற்றி . நாங்ங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்பதை விட விளையாட்டை மாற்றுவோம் என்று சொல்ல விரும்புகிறேன் . உங்கள் நம்பிக்கை சரிதான் . உண்மையை புரிந்துகொள்ளவேண்டுமே ? நாங்கள் இத்தேர்தலில் வெல்லப்போகிறோம் என்று கூறவில்லை . நாங்கள் வெல்ல விரும்புகிறோம் என்றுதான் கூறுகிறேன் . வெற்றி , தோல்வி என எது நடந்தாலும