இடுகைகள்

இந்தியா ஜோன்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலைச்செல்வத்தை அரசிடம் சேர்க்கும் ஜோன்ஸ் - இந்தியானா ஜோன்ஸ் 4!

படம்
இந்தியானா ஜோன்ஸ்! 1981 ஆம் ஆண்டு வெளியான தி ரெய்டர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க், இந்தியானா ஜோன்ஸ் பிரிவில் வந்த முதல் படம். ஜார்ஜ் லூகாஸ் எழுதிய கதையை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.   Raiders of the Lost Ark   இந்த படம் அமெரிக்கா, நேபாளம் தொடங்கி எகிப்துக்குச் சென்று முடிகிறது. நேபாளத்தில் மதுபானக்கடை வைத்திருப்பவர், ஜோன்ஸின் முன்னாள் காதலி. அவரிடம் ஒரு பதக்கம் இருக்கிறது. அவர் தந்தையிடமிருந்து மகளுக்கு வந்த அகழாய்வு சேமிப்பு.  அதை ஜோன்ஸ் கேட்கிறார். காதலி அதை தரமாட்டேன் என்று கூறி அதனோடு தானும் ஜோன்சுடன் புறப்படுகிறார். இவருக்கு 2008 ஆம் ஆண்டு கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஜோன்சுடன் திருமணம் நடைபெறுகிற தகவல் கொசுறாக சொல்லி விடுகிறோம். லாஸ்ட் ஆர்க் என்பது ஒரு சவப்பெட்டி. அதிலுள்ள பொக்கிஷங்களை அடைவதே நாசி ஆட்களின் லட்சியம். ஆனால் அது எப்படி விபரீத விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஏறத்தாழ இந்த படம் தொடங்கி அனைத்து படங்களிலும் நாசிக்கள்தான் வில்லன்கள். எப்படி? படத்தின் கதை 1931 ஆம் ஆண்டு நடக்கிறது என்பதுதான் காரணம். படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்