இடுகைகள்

120 கோடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐ.நா. உருவாகி 75 ஆண்டுகள் ஆவதை நினைவுறுத்தும் அழகிய ஓவியம்!

படம்
படக்குறிப்பு வேர்ல்ட் இன் புரோகிரஸ் எனும் தலைப்பில் பிரெஞ்சு கலைஞர் சைபே, சாக்பீஸ், நிலக்கரி கொண்டு உருவாக்கிய ஓவியம் இது. ஐ.நா அமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் ஆனதையொட்டிய கொண்டாட்ட நிகழ்வு நடந்தது, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில்.

சேட்டன் பகத்: வரி கொடுக்கும் மக்கள் குற்றவாளிகள் அல்ல!

படம்
2016 ஆம் ஆண்டு வருமான வரி கட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 1.2 கோடி. இந்திய மக்கள் தொகை 120 கோடி எனும்போது இந்த வேறுபாட்டை நம்மால் உணர முடியும். இந்த வரி வருவாய் என்பது முழுக்க அலுவலக பணியாளர்களுடையது. ஆண்டு வருமானம் 50 இலட்சத்திற்கு மேலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,50,000 என்று வருமானவரித்துறை கூறியுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மும்பையின் புறநகர் கட்டிடங்களை வாங்கி வசிப்பவர்கள் அப்போது யார்? அவர்கள் இந்த வரி வரம்பிற்குள் வருவார்களா? மாட்டார்களா என்று தெரியவில்லை. நிச்சயம் இந்த வரி ஏய்ப்பை மக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் செய்திருக்க முடியும் என்றால் குழந்தை கூட நம்பாது. அதேசமயம் முன்கூட்டியவரி, முறையாக வரி கட்டுபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் என்பது மிக மோசமானது. உலகில் வேறெங்கும் இதுபோல மோசமான காட்சிகளை நாம் கண்டிருக்க முடியாது. காரணம், அதிகாரிகள் இந்தியாவில் வரி கட்டுபவர்களை குற்றவாளிகளைப் போல கருதுகிறார்கள். இது முறையாக வரி கட்டும் எண்ணமுடையவர்களுக்கு இன்றும் அச்சுறுத்தி வருகிறது. இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தியா போன்ற நாட்டில் பணக்கார ர்களாக இரு