சேட்டன் பகத்: வரி கொடுக்கும் மக்கள் குற்றவாளிகள் அல்ல!
2016 ஆம் ஆண்டு வருமான வரி கட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 1.2 கோடி. இந்திய மக்கள் தொகை 120 கோடி எனும்போது இந்த வேறுபாட்டை நம்மால் உணர முடியும். இந்த வரி வருவாய் என்பது முழுக்க அலுவலக பணியாளர்களுடையது.
ஆண்டு வருமானம் 50 இலட்சத்திற்கு மேலுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,50,000 என்று வருமானவரித்துறை கூறியுள்ளது ஆச்சரியமளிக்கிறது. மும்பையின் புறநகர் கட்டிடங்களை வாங்கி வசிப்பவர்கள் அப்போது யார்? அவர்கள் இந்த வரி வரம்பிற்குள் வருவார்களா? மாட்டார்களா என்று தெரியவில்லை.
நிச்சயம் இந்த வரி ஏய்ப்பை மக்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் செய்திருக்க முடியும் என்றால் குழந்தை கூட நம்பாது. அதேசமயம் முன்கூட்டியவரி, முறையாக வரி கட்டுபவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் என்பது மிக மோசமானது.
உலகில் வேறெங்கும் இதுபோல மோசமான காட்சிகளை நாம் கண்டிருக்க முடியாது. காரணம், அதிகாரிகள் இந்தியாவில் வரி கட்டுபவர்களை குற்றவாளிகளைப் போல கருதுகிறார்கள். இது முறையாக வரி கட்டும் எண்ணமுடையவர்களுக்கு இன்றும் அச்சுறுத்தி வருகிறது. இவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தியா போன்ற நாட்டில் பணக்கார ர்களாக இருப்பது? ஏழைகளின் ரத்த த்தை உறிஞ்சினால்தான் முடியும் என நம்புகிறார்களா?
முதல்விதி
நண்பராக வேண்டாம். ஆனால் மரியாதையான வாடிக்கையாளராக மதியுங்களேன். அவர் கட்டும் பணத்தில்தான் சாலை, குடிநீர், பாலம் உட்பட அனைத்து வசதிகளும் நிறைவேறுகின்றன.ஆனால் அவரை மெக்சிகோ கார்டெல் அதிபரை விசாரிப்பதுபோல எதற்கு நடத்த வேண்டும். இந்த அணுகுமுறை நிச்சயம் இந்தியா போன்ற பெரும் பொருளாதார நாட்டிற்கு வளம் சேர்க்காது. வலிமை சேர்க்காது.
இரண்டாம் விதி
தலைசுற்றும் விதிகளைக் கொண்ட விண்ணப்பங்களை ஒழியுங்கள். இதனை நிரப்பித்தரவே ஒருநாள் பிடித்தால் பிற வேலைகளை எப்போது செய்வதாம்? சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வருமான வரி தாக்கல் செய்யும் வலைத்தளங்களை நாம் பின்பற்றவேண்டிய தேவை உள்ளது.
மூன்றாம் விதி
உலகின் முக்கியமான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருகிறது. இன்றும் நாம் வருமான வரித்துறை பயன்படுத்தும் காகிதங்கள், படுமோசமாக இருக்கின்றன. உலகம் முன்னேறி பயணித்துக்கொண்டிருக்க நாம் இன்னும் 1980 களில் இருக்கிறோம். விதிகளை எளிமையாக்கி வரிகளை வசூலிக்கலாம். அதற்காக அவர்களை பயமுறுத்தக்கூடாது.
நான்காம் விதி
வருமான வரி அலுவலகம் மட்டுமல்ல; வரி கட்டுவதற்கு ஏதுவான மையங்களை அமைப்பது நம் மக்கள் பதற்றத்தை குறைக்கும். மேலும் வரி கட்டுவதை மறப்பது நம்முடைய பரபரப்பான வாழ்க்கையில் சாதாரணமானது. அதற்காக அவர்களை மிரட்டி சொத்துக்களை ஜப்தி செய்வது போல கடிதம் அனுப்புவது நியாயமானதா? இதனையும் அரசு அதிகாரிகள் மாற்றிக்கொள்வது நல்லது.
மகாபாரத த்தில் வேத வியாசர், அரசர் பூக்களிலிருந்து தேனை எடுப்பது போல வரி வசூலிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை அணுகுமுறை அளவிலேனும் கொள்ளவேண்டும்.
நன்றி: சேட்டன்பகத் - இந்தியா பாசிட்டிவ்