கற்றல் குறைபாட்டில் தவிக்கும் குழந்தைகள்!





Image result for learning disability






எஸ்எல்டி எனும் கற்றல் குறைபாட்டில் பத்தில் ஏழு குழந்தைகள் தவிப்பதாக கேர் இன்ஸ்டிடியூட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. ஒப்பீட்டுரீதியில் ஐந்தில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் ஓசூரிலுள்ள மூன்று பள்ளிகளில் 1000 மாணவர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு உள்ளது. ஆசிரியர் கற்றுத்தருவதை மெதுவாக புரிந்துகொள்வதோடு அவற்றை எழுதும்போது பி என்பதை டி என்று புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள் என்கிறார் கேர் இன்ஸ்டிடியூட் நிறுவன இயக்குநர் பிஎஸ் விருதாகிரிநாதன். இம்முறையில் 25 சதவீத மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எந்த குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பிரிவில் வருகின்றனர்.

40 சதவீத மாணவர்கள் கற்றல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காதபோது இவர்கள் பள்ளிக்குச் செல்வதை விரைவில் கைவிடும் ஆபத்து உள்ளது. இக்கற்றல் குறைபாட்டைக் கண்டறிய நிம்ஹான்ஸ் எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கேர் இன்ஸ்டிடியூட் ஹெல்ப் சைல்டு எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கற்றல் குறைபாட்டிற்கு வேறு எந்த சிகிச்சைகளும் கிடையாது. விரைவிலேயே இதனைக் கண்டுபிடித்தால் பள்ளி இடைநிற்றல் போன்ற பிரச்னைகளைத் தவிர்த்து அவர்களை கவனமாக பராமரிக்க முடியும். தற்போது இப்பிரச்னையை அடையாளம் கண்டுள்ள தனியார் பள்ளிகள் இதற்கான சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர்.


டேட்டா

தீவிர கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்கள் 20%. இவர்கள் கற்றலில் கேட்டல், எழுதுவதில் தடுமாற்றம் கொண்டவர்கள்.

25 சதவீத மாணவர்கள் - இவர்கள் கற்றல் குறைபாடு இல்லாதவர்கள். இவர்கள் 25 சதவீத த்திற்கும் குறைவான தவறுகளை செய்கிறார்கள்.

25 சதவீத மாணவர்கள் - இவர்கள் நடுநிலையான கற்றல் குறைபாடு கொண்டவர்கள் - 50 முதல் 75 சதவீதம் தவறுகளைச்செய்கிறார்கள்.


30 சதவீத மாணவர்கள் - இவர்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான தவறுகளைச் செய்கிறார்கள். மென்மையான கற்றல் குறைபாடு கொண்டவர்கள்.


எப்படி கண்டுபிடிப்பது


கண்ணாடியில் எழுத்துக்களை எழுதச்சொல்லும்போது பி என்ற எழுத்தை டி என எழுதுவார்கள்.


ஒரே சொல்லை, வார்த்தையை வெவ்வேறு எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதுவார்கள்.

நிறைய எழுத்துக்களை அடையாளம் கண்டு அறிய தடுமாறுவார்கள். பல எழுத்துக்களை பயன்படுத்த மாட்டார்கள்.

எழுதுவது படிப்பது என்று சொன்னாலே எரிச்சலடைவார்கள். அதனைத் தவிர்க்க முயற்சிப்பார்கள்.

வீட்டுவேலைகள், தேர்வுகளை மறந்துபோவார்கள். அடிப்படைக் கணக்குகளைச் செய்யவே தடுமாறுவார்கள்.


அடையாளம்

வகுப்பில் கவனமாக இருக்க மாட்டார்கள்.

சமூகத்தோடு இணைந்து பழகுவது குறைவு.


பள்ளிக்குப் போக அடம் பிடிப்பார்கள்.

தன்னம்பிக்கை இருக்காது.


காரணம்

மரபணுரீதியான பிரச்னைகள்

நரம்பியல் ரீதியான இயக்க பிரச்னைகள்.


Image: Dr Elizabeth Woodcock
News:TOI