கணினி புரோகிராமிங் அறிவு தேவை!
இந்தியாவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய கல்வி வாரியங்கள் கணினிபுரோகிராமிங்கை பாடமாக கல்வித்திட்டத்தில் சேர்த்துள்ளன.
இன்று வீட்டு ஹாலில் உள்ள ஸ்மார்ட் டிவிகள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்டூன் தொடர்களை ஒரம்கட்டியுள்ளன. வீட்டில் விளையாடும் செஸ் போன்ற விளையாட்டுகளும் கூட அந்த காலத்தில் விளையாடிய விளையாட்டுகளாகிவிட்டன. வீட்டினுள்ளே அல்லது வெளியே விளையாடும் விளையாட்டுகளை விட இணைய விளையாட்டுகள், புதிர்களையே சிறுவர்கள் இன்று விரும்புகின்றனர்.
எனவேதான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 6,7, 8 ஆம் வகுப்புகளில் விசுவல் பேசிக் மற்றும் ஹெச்டிஎம்எல் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9, 10ஆம் வகுப்புகளில் ஜாவா, சி மொழி ஆகிய பாடங்கள் கற்றுத்தருகின்றனர். ஆனால் இது கட்டாயமல்ல: மாணவர்களின் தேர்வாகவே இருக்கிறது. தற்போது தொடக்கப் பள்ளியில் படிக்கும் 65 சதவீத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, தற்போதுள்ளவற்றை விட மாறுபட்டதாக இருக்கும் என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரம் தன் எதிர்கால வேலைவாய்ப்புகள் என்ற அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
எதிர்கால வாய்ப்புகள் கணினி புரோகிராமிங் மற்றும் அல்காரிதம் சார்ந்தே அமையும். இதன்மூலம் அவர்களின் கருத்துகளை அவர்கள் தெரிவிக்க முடியும் என்கிறார் சுக் சுவாங் அகாடமியை நடத்திவரும் திவ்யாங்.
தகவல்- டைம்ஸ் ஆப் இந்தியா, நியூ சயின்டிஸ்ட்
படம் - தி எஜூகேட்டர்