குழந்தைகளுக்கான சூப்பர் கேமிராக்கள்!
குழந்தைகளுக்கான கேமிரா!
NIKON COOLPIX W100
வாட்டர் ப்ரூப் மற்றும் ஷாக் ஃப்ரூப் கொண்ட கேமிரா. நான்கு வகையான ஜாலி நிறங்களில் கிடைக்கிறது. குறைவான விலையில் நிறைவான ஆப்ஷன்களுடன் கிடைக்கும் கேமரா இது. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். கிரியேட்டிவிட்டியின் ஜன்னலைத் திறங்கள்.
மைனஸ் பக்கம் - படத்தின் தரம், சிறிய சென்சார்,சிறிய திரையின் தரம்.
ரூ.9,500
FUJIFILM FINEPIX XP130

5 முதல் 10 வயது வரையிலுள்ள சிறுவர்களுக்கான கேமிரா. சற்று சிக்கலான ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. காசு போட்டால் இந்த கேமிராவை நீங்கள் கையில் பிடிக்கலாம். தண்ணீரில் நனைத்து மணலில் போட்டாலும் ஃப்யூஜிஃபிலிம் கேமரா எதுவும் ஆகாது. நல்ல வெளிச்சமான நேரத்தில் புகைப்படம் எடுத்தால், படங்கள் பளிச்சென வருகிறது. மேலும் டூர், பிக்னிக்கான சரியான தேர்வு இது.
மைனஸ் பக்கம் - 4 கே படத் தரம் கிடையாது. படத்தரம் குறைவு
விலை. ரூ. 20 ஆயிரம்.
INSTAX MINI 70

ஃபிலிம் சுருளில் படமெடுக்கலாம். இன்ஸ்டாமிக்ஸின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். வீடியோ வசதி கிடையாது. இதையெல்லாம் தாண்டி இந்த கேமிராதான் வேண்டும் என்றால் வேறு வழியில்லை. உங்கள் பிள்ளைக்கு வாங்கித் தந்துவிடுங்கள். இது அனலாக் கேமிரா என்பதால், என்ன எடுத்தோம் என்பதை பிலிமை பிரிண்ட் போட்டால்தான் தெரியும். பிலிமின் காசு அதிகம் என்பதால், கவனம். இன்னும் கொஞ்சம் பர்சில் காசு இருக்கிறது என்றால் அனலாக், டிஜிட்டல் இருப்பது போல கேமிராவை இதே கம்பெனியில் வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது. முக்கியமாக இதில் செல்ஃபி மோடும் உண்டு.
மைனஸ் பக்கம் - பிலிம் காசு ரேட் கூடும், டிஜிட்டல் பிரிவியூ கிடையாது.
விலை ரூ. 7,807
VTECH KIDIZOOM DUO 5.0
புகைப்படம் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான கேமிரா. இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கலாம். இதில் வாய்ஸ் ரெக்கார்டர், போட்டோ எடிட்டர் என பல்வேறு வசதிகளைக் கொடுத்து குஷிப்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி குழந்தைகளுக்கு கேமிரா குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் கருவி இது. எனவே சோனி, கெனான் முதற்கொண்டு கம்பேர் செய்யாதீர்கள். அதற்காக பின்னர் வருத்தப்படுவீர்கள்.
மைனஸ் - சொல்லிக்கொள்ளும்படி பெரிய ஆப்ஷன்கள் ஏதும் கிடையாது. குறைந்த ரிசல்யூஷன் கொண்ட படங்கள்.
ரூ. 6,467
நன்றி: டி3 இதழ்