ஏஐ உருவாக்கும் ஆபாச படங்கள்!

செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் ஆபாச படங்கள்!
இணையத்தில் பிரபல நடிகைகளின் முகங்களைப் பொருத்தி ஆபாச படங்கள் முதலில் வெளியானபோது யாரும் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவை அனைத்தும் வக்கிர கும்பல்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களைப் பயன்படுத்தி செய்தவை என்றால் அது செய்திதானே?
அதைத்தான் குளோபல் டைம்ஸ் மற்றும் தி பெய்ஜிங் டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் செய்திகளாக்கி வெளியிட்டுள்ளன. படங்கள் மட்டுமல்ல வீடியோக்களையும் போலியாக தயாரித்து வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவாக பராக் ஒபாமா மற்றும் மார்க் ஸூக்கர்பெர்க் தான் சொல்லாத விஷயங்களையும் செயற்கை நுண்ணறிவு மூலம் பேசத் தொடங்கியுள்ளனர்.
மேலும் ஸ்கார்லெட் ஜோகன்சன் மற்றும கல் கடோட் ஆகியோரின் புகைப்படங்களும் ஆபாச அழகிகளின் உடல்களைப் பெற்று உலகமெங்கும் ஆபாசப்பட ரசிகர்களை சந்தோஷப்பட வைத்து அல்லது அதிர்ச்சியடைய வைத்து வருகின்றனர். சமூக வலைத்தளமான வெய்போவில் டிவி நடிகை தொடர்பான வீடியோதான் பலருக்கும் போலி வீடியோக்கள் பற்றிய செய்தியை தீவிரமாக்கியது. அலிபாபாவின் வலைத்தளத்திலும் கூட பல்வேறு போலி செலிபிரிட்டிகளின் படங்கள், வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் எக்ஸ்ரே என்ற ஆப் வெளியானது. இதில் ஆடையுள்ள பெண்ணின் படத்தை அப்லோடு செய்தால், அப்பெண்ணை முழு நிர்வாணமாக காட்டுவதுதான் இந்த ஆப்பின் ஸ்பெஷல். பின்னர் இந்த ஆப், திரும்ப பெறப்பட்டது. ஆபாச படங்களைப் பார்ப்பது சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மாறுவேடப்போட்டி போல நடிகைகளின் படங்களை மார்ப்பிங் செய்து போலி வீடியோவாக, படங்களாக செய்வது பற்றி இன்னும் உறுதியான சட்டங்கள் வரவில்லை. விரைவில் இதற்கும் தடைச்சட்டம் வரக்கூடும். அமெரிக்காவின் வர்ஜீனியாவில் போலி வீடியோக்கள் தொடர்பாக செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி - அபாகஸ்.