வித்தியாசமான ஆனால் டல்லான திரில்லர் படம் - சந்தீப் கிஷன் சூப்பர்!
நின்னு வீடானி நீடானு நேனே - தெலுங்கு
இயக்கம்- கார்த்திக் ராஜூ
ஒளிப்பதிவு பிகே வர்மா
இசை தமன் எஸ்எஸ்
தேறுவது
சந்தீப் கிஷன் - அன்யா சிங்கின் காதல், சண்டை எல்லாமே குஷி மூடுக்கு மனசை மாத்துது. ஆனால் கண்ணாடி குறுக்கே வர எல்லாமே மாறுது. இசையும் ஒளிப்பதிவும் அசத்தலாக இருக்கு. ஆனா எங்கே பிரச்னை? கார்த்திக் ராஜூவோட கதையிலதான்.
எரிச்சல்
கதையில் ஹீரோ செய்யறக்கு ஏதாவது காரியம் இருக்கும். இதில் அவர் தான் ஏன் இறந்தோம் எப்படி இறந்தோம்னு கண்டுபிடிக்கிறார். அது குத்தம் இல்ல. ஆனால் பார்க்கிறவங்க பொறுமைய சோதிச்சா எப்படி?
பாசம் இருந்தாலும் இன்னொருத்தரோட உடம்பில் தன் மகன், மகள் இருக்கிறார் கிறாள்ங்கிறதை யாரும் ஏத்துக்க மாட்டாங்க. ஒருத்தரோட பேருங்கிறது வெறும் சவுண்டு மட்டும் கிடையாது.அவரோட உருவமும் உடனே உங்களுக்கு ஞாபகத்துக்கு வரும் இல்லியா. அந்த இடம் அவுட்டு. இன்னொன்னு, ஹீரோ தன் காதலியோட பிறந்த நாளைக்கூட கொஞ்சம் அட்வென்சரஸ்ஸா அவரைக் கடத்தி கட்டிப்போட்டு நீச்சல் குளத்தில் தூக்கி வீசி கேக்கு வெட்டி கொண்டாடுறார். இந்த மனநிலையில் உள்ளவரால ஏற்படுற விபத்துதான் கார் விபத்து. இதை நினைச்சு மருகற காட்சி ரொம்பக் கடைசியா வருது. ஏன் ப்ரோ?
காலேஜே பயப்படும் கோபக்காரர் ரிஷியின் கேரக்டர் தியாவுக்கு எப்படி பிடிக்கிறது? என்பதெல்லாம் மிகச்சில வசனங்களில் கடந்து செல்கிறது? கதையின் க்ளைமேக்ஸில் கார்த்திக் நரேன் பேசும் வசனங்கள் சூப்பர். 2035 தொடங்கி 2013 போய் திரும்ப எதிர்காலத்திற்கு போய் முடிகிறது. ஆனால் அது பெரிய சுவாரசியமான பயணமாகவெல்லாம் இல்லை.
போலீசாக காமெடி செய்கிறார் பொசனேனி கிருஷ்ணா |
வெண்ணிலா கிஷோரை இப்படியா வீணடிக்கிறது? படத்தில் இருக்கோமா இல்லையான்னு அவரே குழம்பியிருப்பார்.
வித்தியாசமான திரில்லர் படம் வேணும்கிறவங்க மட்டும் படத்துக்குப் போங்க.
கோமாளிமேடை டீம்