அரசு மருத்துவமனைகளின் அவலம் தீர மோடிகேர் உதவும் - சேட்டன் பகத்




Image result for chetan bhagat



கடமையைச் செய்ய கையூட்டா? அரசு மருத்துவமனை அவலம்!






உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற சாபகேட்டின் விளைவாக 72க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோயுள்ளன. இதற்கு தனிநபர் பணிமாற்றம் எந்தளவு சாத்தியமான மாற்றத்தை, விழிப்புணர்வை அங்கு கொண்டுவரும் என்று எனக்குப் புரியவில்லை.

இந்திய அரசு இந்தியாவில் ஏராளமான மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களை நடத்தி வருகிறது. மேலும் இவை மட்டுமன்றி எல்ஐசி போன்ற லாபத்தில் இயங்கும் நிதிநிறுவனங்களும் கூட கையில் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு தேவையான ஆக்சிஜனுக்கு மட்டும் அரசிடம் பணம் இல்லை என்றால் நாம் இந்த நிலைக்கு வெட்கப்படவேண்டாமா? 

இந்தியாவில் அரசுத்துறையில் அலங்கோலத்திற்கு அரசு ஹோட்டல்கள் மற்றும் எம்டிஎன்எல், ஏர் இந்தியா சாட்சியாக இருக்கின்றன. உலகில் வேலை செய்யாமலிருக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் மருத்துவமனையில் தன் பணியைக் கடமையைச் செய்யவே காசு கேட்கிறார்கள். காந்தி காலத்து தர்மம் இதுதான். 

இந்த நிலையில் மருத்துவத்துறையை தனியாருக்கு கொடுப்பது சேவையை மேம்படுத்த உதவும். சேவையை காலம் தாழ்த்தி வழங்குவது, நோயாளிகளை மிக மோசமான நிலையில் வைத்திருப்பதுதான் அரசின் நோக்கம் என்றால் அதற்கு தனியார் எவ்வளவோ மேல்தான். 

அரசுசேவைகளின் தனித்துவமான அடையாளமே மிக மோசமான அதன் சேவைகள்தான். ஏர் இந்தியாவில் பிரச்னை உணவு சைவம், அசைவம் என்பதல்ல; தாமதமாகும் விமான சேவைகள்தான். எம்டிஎன்எல்லை அணுகினால் உங்களுக்குத் தெரியும். ஏன் மக்கள் ஜியோவை நாடி ஓடுகிறார்கள் என. அரசு ஊழியர்கள் காட்டும் தொழில் விசுவாசம் மக்களை அப்படி வசீகரிக்கிறது. 

மருத்துவமனைகளை நான் குறை மட்டுமே சொல்லுவதாக நினைக்காதீர்கள், உலகிலேயே சிறந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் இருக்கிறார்கள். இருக்கும் பற்றாக்குறை வசதிகளைக் கொண்டு மக்களைக் காப்பாற்ற போராடுகிறார்கள். ஆனால் அரசுக்கு தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பலியாக மருத்துவர்களையே கைகாட்டுகிறது. இது வழக்கமாகி போய்விட்டது. அரசு கிராமப்புற மருத்துவக் காப்பீட்டை நாடு முழுக்க கொண்டு வருவது அவசியம். மோடிகேர் திட்டத்தை ஏன் ஓபாமா கேர் போல விரிவாக்க கூடாது? 

அரசுக் கட்டுமானத்தை வலிமையாக்கினால் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி அவர்களின் உயிர்களைக் காக்க முடியும். சிறந்த ஜனநாயக அரசு நிச்சயம் இதையே தேர்ந்தெடுக்கும். செய்யும். 

சேட்டன்பகத்தின் இந்தியா பாசிட்டிவ் கட்டுரையைத் தழுவியது.